Auto News

பஜாஜ் V பைக்குகள் பிப்ரவரி 1ல் அறிமுகம்

ஐஎன்எஸ் விக்ராந்த் போரக்கப்பல் மெட்டல் பாகங்களால் பஜாஜ் V பைக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக டீஸர் வீடியோ வெளியிட்டுள்ள பஜாஜ் ஆட்டோ வி பைக்குகளை வரும் பிப்ரவரி 1ந் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

bajaj-v-bikes

 

 

இந்தியாவின் பழமையான விமான தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் 1971 ஆம் ஆண்டில் இந்தியா பாகிஸ்தான் போரின் பொழுது முக்கிய பங்காற்றிய போர்க்கப்பலாகும். பழையதான விக்ராந்த் கப்பல் உடைக்கப்பட்ட பொழுது அதன் பெருமையை நிலைக்கும் வகையில் அதன் மெட்டல் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பைக்குகள்தான்  வி ரேஞ்ச் பைக்குகள் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. குடியரசு தினமான இன்று இதன் டீஸர் வீடியோ வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 1ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டிஸ்கவர் வகை பைக்குகளுக்கு மாற்றாக க்ரூஸர் ஸ்டைல் பைக்கின் தோற்றத்தின் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய பைக்காக இவைகள் விளங்கும். வெளியிட்டுள்ள டீஸர் வீடியோவில் க்ரூஸர் ஸ்டைலி இருக்கைகள் , முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் பின்புறம் சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது.

வரும் பிப்ரவரி 1ந் தேதி அதிகாவப்பூர்வமாக பஜாஜ் வி பைக்குகளின் விபரங்கள் வெளியாக உள்ளன.

பஜாஜ் V பைக்குகள் வீடியோ

Share
Published by
MR.Durai
Tags: Bajaj