பல்சர் RS200 பைக் ஆலாய் வீல் தரமற்றதா ? – அதிர்ச்சி ரிபோர்ட்

0
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்த பல்சர் ஆர்எஸ் 200 பைக்கில் தரமற்ற ஆலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளதா ? ஆலாய் வீல் நொறுங்குமா ? நடந்தது என்ன ?

பல்சர் ஆர்எஸ் 200

விற்பனைக்கு வந்த சில மாதங்களிலே பஜாஜ் பல்சர் RS200 பைக் நல்ல வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. இந்த நிலையில் முன் சக்கர ஆலாய் வீல் நொறுங்கிய படங்கள் முகநூலில் வெளியாகியுள்ளது.

நடந்தது என்ன ?

Google News

மும்பையை சேர்ந்த முகுசின் பட்டேல் என்பவர் புதிய பல்சர் ஆர்எஸ் 200 பைக்கினை கடந்த சில வாரங்களுக்கு முன் வாங்கியுள்ளார். அவரும் அவருடைய மனைவியும் பயணித்த பொழுது முன்பக்க சக்கரம் உடைந்துள்ளது. இதனால் தற்பொழுது லேசான காயங்களுடன் இருவரும் மருத்துவமனையில் உள்ளனர்.

பல்சர் ஆர்எஸ் 200

விபத்து எதுவும் நடக்காத பொழுதே சக்கரங்கள் முழுதாக நொறுங்கியுள்ளது. முகப்பு விளக்கு ஃபேரிங் பேனல்கள் போன்வைகளில் எவ்விதமான கீறல்கள் கூட இல்லை என்பது படத்தினை பார்த்தால் உங்களுக்கு தெரியும்.

பல்சர் ஆர்எஸ் 200

தரமற்ற பொருள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்க்கு ஆலாய் வீல் உடைவது புதிதல்ல. இதற்க்கு முன் கேடிஎம் 390 பைக்கில் ஆலாய் வீல் நொறுங்கியது. அதனை தொடர்ந்து இரண்டாம் முறையாக பல்சரிலும் இதே பிரச்சனை தரமான பைக்குகளை பஜாஜ் தயராக்கின்றது. ஆனால் தரமற்ற சப்ளையர்களால் பிராண்டின் மதிப்பினை பஜாஜ் இழந்துள்ளது.

பல்சர் ஆர்எஸ் 200

பல்சர் ஆர்எஸ் 200 பைக் வாங்கியருப்பவர்கள் மிக கவனமாக உங்கள் ஆலாய் வீல்களை கவனிங்க…

கண்டிப்பாக பகிர்ந்துகொள்ளுங்க….

Bajaj Pulsar RS200 bike alloy wheel cracked due to the poor quality