பிரசத்தி பெற்ற ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் பாடல்களை கேட்பதற்கு என இரண்டு ஸ்பீக்கர்களை பொருத்தி ரெயின்போ ஆடியோ இந்தியா நிறுவனம் அசத்தியுள்ளது. முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் வாயிலாக பாடல்களை கேட்கலாம்.

ஆடியோ சிஸ்டம் ஆக்டிவா

முன்பக்க அப்ரான் பேனல்களில் இரண்டு ஸ்பீக்கர் மற்றும் எல்இடி விளக்கு சுற்றப்பட்ட இரு ட்வீட்கள் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் முழுமையான ஆடியோ சிஸ்டத்தை தகவல்கள் இடம்பெறவில்லை.

இந்த ஆடியோ சிஸ்டத்தில் பாடல்களை பயணித்தின் பொழுது இலகுவாக ரசிக்க ஏற்றதாக அமைந்திருக்கும் என நம்பப்படுகின்றது. இது குறித்து ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே காணலாம்.

https://www.facebook.com/rainbowaudioindia/videos/720930158109001/

 

விற்பனை செய்யப்படுகின்ற ஆக்டிவா மாடலில் 109.2 cc  இன்ஜினில் 8 bhp பவருடன் 8.83 Nm டார்க் வெளிப்படுத்தும். V-matic கியர்பாக்சினை பெற்று விளங்கும். ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதியுடன் விளங்குகின்றது.