சிறப்பான தோற்றம் பெர்ஃபாரமன்ஸ் போன்றவற்றை வெளிப்படுத்தக்கூடிய 1 சீரிஸ் கார் இந்திய சந்தையில் சிறப்பான வரேவற்பினை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்று விதமான மாறுப்பட்டவைகளில் வெளிவந்துள்ளது.
பெட்ரோல் என்ஜின்
1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 136பிஎச்பி மற்றும் டார்க் 220 என்எம் ஆகும். இசட்எஃப் 8 வேக ஆட்டோ கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 16.28கிமீ ஆகும்.
116ஐ பெட்ரோல் மாறுப்பட்டவையில் மட்டுமே கிடைக்கும். இவற்றில் உள்ள வசதிகள் தானியங்கி முகப்பு விளக்குகள், பனி விளக்குகள், என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பொத்தான், பின்புற பார்க்கிங் சென்சார், 6 காற்றுப்பைகள், ஏபிஎஸ் 16 இச்ச் ஆலாய் வீல் , ரீஜெனரேட்டிவ் அமைப்பு போன்றவை உள்ளன.
டீசல் என்ஜின்
2.0 லிட்டர் ட்ர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 143பிஎச்பி மற்றும் டார்க் 320 என்எம் ஆகும். இசட்எஃப் 8 வேக ஆட்டோ கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 20.58கிமீ ஆகும்.
118டி டீசல் காரில் 116ஐ பெட்ரோல் காரில் உள்ள வசதிகள் அனைத்தும் இதிலும் உள்ளது.
118டி ஸ்போர்ட்லைன் ஹேண்ட்ஸ் ஃப்ரீ கன்ட்ரோல் வசதி, டியூவல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, பிஎம்டபிள்யூ ஐடிரைவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்லைடிங் வசதியுடன் முன்பக்க ஆர்ம் ரெஸ்ட் போன்றவைகள் உள்ளன.
118டி ஸ்போர்ட் ப்ளஸ் மாறுப்பட்டவையில் கீலெஸ் என்ட்ரி, 17 இன்ச் ஆலாய் வீல் சன்ரூஃப் போன்றவை இருக்கும்.
நான்கு விதமான மோடில் இயக்கலாம். அவை கம்ஃபோர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட்+ மற்றும் ஈக்கோ புரோ.
பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் விலை விபரம்
116ஐ பெட்ரோல்: ரூ. 20.9 லட்சம்
118டி டீசல்: ரூ. 22.9 லட்சம்
118டி ஸ்போர்ட்லைன் டீசல் : ரூ. 25.9 லட்சம்
118டி ஸ்போர்ட் ப்ளஸ்: ரூ.29.9 லட்சம்