பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் பெட்ரோல் மீண்டும் அறிமுகம்

0

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் சொகுசு செடான் பெட்ரோல் கார் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுதும் வடிவமைக்கபட்ட மாடலாகவே பெட்ரோல் கார்கள் இறக்குமதி செய்யப்படுகின்றது.

BMW 340i, Colour: mediterranean blue. Leather: Dakota Oyster, Sport Line

டீசல் கார் இந்தியாவிலே ஒருங்கினைக்கப்படுவது போல் அல்லாமல் பெட்ரோல் கார்கள் முழுவதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இருவிதமான வேரியண்டில் 320i பேட்ஜில் வந்துள்ளது.

184 hp ஆற்றலை வெளிப்புத்தும் 2.0 லிட்டர் ட்வின் பவர் டர்போ பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 270 Nm ஆகும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் லக்சூரி லைன் வேரியண்டில் பேடல் ஷிஃப்டர் இணைக்கப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தினை 7.3 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

பிஎம்டபிள்யூ 320i பிரஸ்டீஜ் வேரியன்டில் எல்இடி முகப்பு விளக்குகள் , 6.5 இஞ்ச் பிஎம்டபிள்யூ ஐடிரைவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பிஎம்டபிள்யூ ஆப்ஸ் மற்றும் 4 விதமான டிரைவிங் மோடு மற்றும்  16 இஞ்ச் அலாய் வீலினை பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ 320i லக்சூரி லைன் வேரியன்டில் 5 விதமான டிரைவிங் மோட் , 8.8 இஞ்ச் தொடுதிரை அமைப்பினை பெற்ற பிஎம்டபிள்யூ ஐடிரைவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பிஎம்டபிள்யூ ஆப்ஸ் , 250 W ஆடியோ சிஸ்டம் , எலக்ட்ரிக் மேற்கூறை மற்றும் 17 இஞ்ச் அலாய் வீலினை பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் பெட்ரோல் வேரியண்ட் விலை விபரம்

BMW 320i Prestige – ரூ. 36, 90, 000
BMW 320i Luxury Line – ரூ. 42, 70, 000

{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }

மேலும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரிலும் பெட்ரோல் வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. இதிலும் 2.0 லிட்டர் ட்வின் பவர் ட்ர்போ என்ஜினே பொருத்தப்பட்டிருக்கும்.