பிரபலமான எம்ஹவாக் எஞ்சினுடன் சைலோ எச் சீரிஸ்

0
மஹிந்திரா சைலோ எம்பிவி காரில் புதிய எச் சீரிஸ் என்ற பெயரில் மிக பிரசத்தி பெற்ற எம்ஹவாக் எஞ்சின் பொருத்தப்பட்ட சைலோ கார்களை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

சைலோ டாப் வேரியண்டான இ9 யில் மட்டுமே எம்ஹவாக் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. தற்பொழுது விற்பனைக்கு வந்தள்ள எச் சீரிஸ் 3 விதமான வேரிண்ட்டில் வெளிவந்துள்ளது. அவை எச்4, எச்8 மற்றும் எச்9 ஆகும்.

mahindra xylo h-series

2.2 லிட்டர் எம்ஹவாக் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 120பிஎஸ் மற்றும் டார்க் 280என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 14.02கிமீ ஆகும்.

சைலோ எச்4 வேரியண்டில் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.

சைலோ எச்8 வேரியண்டில் டூவல் காற்றுப்பைகள் பொருத்தப்பட்டுள்ளது.

சைலோ எச்9 வேரியண்டில் மஹிந்திரா வாய்ஸ் கமெண்ட் நுட்பம், குரூஸ் கன்ட்ரோல், டிஜிட்டல் டிரைவ் அசிஸ்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது.

பல்வேறு விதமான பாதுகாப்பு வசதிகளை எச் சீரிஸில் பயன்படுத்தியுள்ளனர்.

சைலோ எச்8 மற்றும் எச்9 வேரியண்ட்களுக்கு மட்டும் புதிய டால்பின் கிரே வண்ணத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

டாப் வேரியண்ட்டின் விலையிலே எச் சீரிஸ் விற்பனைக்கு வந்துள்ளது.
சைலோ எச் வேரியண்டின் தொடக்க விலை ரூ.8.23 இலட்சம் (மும்பை எக்ஸ்ஷோரூம்)