கடந்த 2014 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த இரண்டாவது தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் கூடுதல் வசதிகள் மற்றும் தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றதாகவும், புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாகவும் வரவுள்ளது.
2017 மஹிந்திரா ஸ்கார்பியோ
ஸ்கார்பியோ காரில் இரண்டு விதமான 2.2 லிட்டர் எம்ஹாக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 125 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் முறுக்கு விசை 280 என்எம் கொண்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த என்ஜினாகவும் மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகின்றது.
மேலும் பேஸ் மாடல் எஸ் 2 காரில் மட்டும் 2.5 லிட்டர் என்ஜின் பொருத்தியுள்ளனர். இதன் ஆற்றல் 75 பிஎச்பி ஆகும். இதன் முறுக்குவிசை 200என்எம் ஆகும். இரண்டு என்ஜினிலும் 5 வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது விற்பனையிலிருந்த 6 வேக டிசிஐ ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் நீக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் 1.99 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் நீக்கப்பட்டாலும் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள புதிய 2017 ஸ்கார்பியோ எஸ்யூவி மாடலில் எக்ஸ்யூவி500 காரில் உள்ள 6 வேக aisin ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது.
முன்புறத்தில் ஹெட்லேம்ப், கிரில்,பம்பர் அமைப்பு உள்பட சிறிய அளவிலான மாற்றங்களும் இன்டிரியரில் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட இருக்கை கவர்கள் போன்றவற்றுடன் பின்புறத்தில் புதுப்பபிக்கப்பட்ட பம்பர் மற்றும் டெயில் விளக்கு பெற்றிருக்கலாம்.
மற்றொரு தகவலின் அடிப்படையில் 2.2 லிட்டர் எஞ்சின் தற்போது 121 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றது. இதனை 140 ஹெச்பி ஆக உயர்த்த வாய்புளதாக தெரிவிப்பதுடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. பெட்ரோல் எஞ்சின் இடம்பெறுவது குறித்து எந்த தகவலும் இல்லை. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத இறுதியில் புதிய ஸ்கார்பியோ விற்பனைக்கு வரலாம்.