புதிய மாருதி எர்டிகா காரின் மைலேஜ் அதிகரிப்பு

மாருதி சுசூகி எர்டிகா எம்பிவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் சில முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளது.

மாருதி எர்டிகா

வரவிருக்கும் எர்டிகா காரில் முன்புறத்தில் 3 ஸ்லாட்களை கொண்ட குரோம் பூச்சூ கிரில் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய தேன்கூடு கிரில் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் பனி விளக்குகளை சுற்றி குரோம் பூச்சூ கொடுக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டு தோற்றத்தில் பெரிதாக மாற்றங்கள் இல்லை. புதிய ஆலாய் வீல்கள் இணைக்கப்பட்டுள்ளது.

பின்புறத்தில் குரோம் பூச்சூ கொண்ட குரோம் பார் நம்பர் பிளேட்டின் மேல் கொடுக்கப்பட்டுள்ளது.

உட்ப்புறத்தில் சில மாற்றங்களை பெற்றிருக்கும். மேலும் கூடுதலான வசதிகளை கொண்ட உயர்ரக வகையினை விற்பனைக்கு வரும். உயர்ரக வகையில் கீலெஸ் என்ட்ரி , ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் , புதிய இன்ஃபோன்டெயின்மென்ட் அமைப்பு , ஸ்டீயரீங் வீல் கன்ட்ரோல் ஸ்விட்ச் என பல வசதிகளை கொண்டிருக்கும்.

மாருதி எர்டிகா

spy image source :gaadiwaadi

1.4 லிட்டர் கே வரிசை பெட்ரொல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் என இரண்டிலும் கிடைக்கும்.

1.3 லிட்டர் டிடிஐஎஸ் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 25.2கிமீ தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 20.77கிமீ ஆகும். புதிய எர்டிக விற்பனைக்கு வரும் பொழுது இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் எம்பிவி காராக விளங்கும்.

மேலும் ஏஎம்டி பொருத்தப்பட்ட எம்பிவி மாடலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரும் ஜூன் மாதம் புதிய மாருதி சுசூகி எர்டிகா விற்பனைக்கு வரும்.