புதிய மாருதி சியாஸ் கார் வருகை விரைவில்..!

0

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற செடான் ரக கார்களில் முன்னணி மாடலாக விளங்கும் மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் மாடலின் புதிய மாருதி சியாஸ் செடான் கார் சோதனை ஓட்டத்தில் ஈடுப்பட்டு வருவதனால் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

maruti suzuki ciaz

Google News

2017 மாருதி சியாஸ்

மாருதியின் சியாஸ் செடான் காரின் மேப்படுத்தப்பட்ட மாடல் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வருவதனை உறுதி செய்யும் வகையில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்கள் வெளியாகியுள்ளது.

புதிய சியாஸ் காரில் கூடுதலான வசதிகள் மற்றும் தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டதாக மட்டுமே வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக முகப்பில் எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்ற புராஜெக்டர் முகப்பு விளக்குகள் ,பனி விளக்கு அறையில் சிறிய அளவிலான மாற்றங்கள் மற்றும் பின்புற அமைப்பில் டெயில் விளக்கில் சில மாற்றங்களை கொண்டிருக்கலாம்.

இதுதவிர இன்டிரியர் அமைப்பு பலேனோ காரில் உள்ளதை போன்ற இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புடன் , இருக்கை மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரி போன்றவற்றில் சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டிருக்கும்.

முதன்முறையாக மாருதி சியாஸ் காரில் மாருதியின் எஸ்ஹெச்விஎஸ் நுட்பத்தை பெற்ற மாடலாக அறிமுகம் செய்யப்பட்டதாகும். இந்த காரில் உள்ள எஞ்சின் ஆற்றல் மற்றும்டார்க் போன்றவற்றில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. எனவே பயன்பாட்டில் உள்ள  89பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டடுள்ளது. சியாஸ் ஹைபிரிட் டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 28கிமீ ஆகும்.

maruti ciaz 2

91 bhp  பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டடுள்ளது

ஆரம்பத்தில் மாருதியின் ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட்ட சியாஸ் தற்போது நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனைவ செய்யப்படுவது இங்கே குறிப்பிடதக்கதாகும்.