புதிய ரெனோ டஸ்ட்டர் ஸ்பை படங்கள்

2016 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் சென்னையில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. புதிய டஸ்ட்டர் எஸ்யூவி காரில் ஏஎம்டி கியர் ஆப்ஷனுடன் வரவுள்ளது.

Renault-Duster-Facelift
புதிய ரெனோ டஸ்ட்டர் பிரேசில்

சென்னை ஓரகடத்தில் அமைந்துள்ள ரெனோ தொழிற்சாலைக்கு அருகில் சோதனை செய்யப்பட்டு வரும் புதிய டஸ்ட்டர் கார் பிரேசிலில் அறிமுகம் செய்யப்பட்ட மாடலை போலவே இருக்க வாய்ப்புகள் உள்ளது.

புதிய டஸ்ட்டர் காரில் 110பிஎஸ் வேரியண்டில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் பெற வாய்ப்புகள் உள்ளது. மேலும் உட்புறத்தில் சில மேம்பாடுகள் மற்றும் கூடுதல் வசதிகளை பெற்றிருக்கும். வெளிதோற்றத்தில் முகப்பு மற்றும் பின்புறங்களில் பம்பர் , கிரில் போன்றவற்றை புதுப்பிக்கப்பட்டிருக்கலாம்.

2016-Renault-Duster-spied

2016-Renault-Duster-spied-2

 

க்ரெட்டா ஆட்டோமேட்டிக் மாடல் சிறப்பான வரவேற்பினை பெற்றிருப்பதாலும் , டியூவி300 எஸ்யூவி காரின் ஏஎம்டி மாடலும் நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவதனால் விற்பனை சரிவினை  சந்தித்து வரும் டஸ்ட்டரை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் ரெனோ உள்ளது.

வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 மோட்டார் ஷோவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வாசகர்களே…நீங்களும் இதுபோன்ற சோதனை ஓட்ட கார்களை கண்டால் படமெடுத்து அனுப்பி வையுங்கள்..அனுப்ப வேண்டிய முகவரி ; rayadurai@automobiletamilan.com

2016 Renault Duster spied

imagesource