புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி நவம்பர் 19 முதல்

0
ரேஞ்ச்ரோவர் எவோக் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்தாயாவில் வரும் நவம்பர் 19ந் தேதி விற்பனைக்கு வருகின்றது.  புதிய எவோக் கார் பல கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது.

எவோக் எஸ்யூவி

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் காருக்கு முன்பதிவு கடந்த சில வாரங்களாக நடந்து வரும் நிலையில் விற்பனைக்கு வரவுள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தோற்றத்தில் பல மாற்றங்களை பெற்றுள்ள எவோக் காரில் விளக்குகள் அனைத்தும் எல்இடி விளக்குளாக மாறியுள்ளது. மேலும் உட்புறத்தில் புதிய 8.0 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , பின் இருக்கைகளுக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தானாக திறக்கும் டெயில்கேட் என பல புதிய வசதிகளை பெற்றுள்ளது.

புதிய  ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி காரில் 187பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்நியாவிலே புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி ஒருங்கினைக்கப்பட உள்ளது.

Range Rover Evoque facelift to launch on November 19, 2015