புதிய ஸ்கோடா சூப்பர்ப் டீஸர் வெளியீடு

0

வரும் பிப்ரவரி 23ந் தேதி புதிய ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் முதற்கட்ட டீஸர் மாடலை ஸ்கோடா வெளியிட்டுள்ளது. கடந்த வருடத்தின் மத்தியில் 2016 ஸ்கோடா சூப்பர்ப் சர்வதேச அளவில் விற்பனைக்கு வந்தது.

new-skoda-superb

ஃபோக்ஸ்வேகன் பஸாத் , ஆடி ஏ4 கார்கள் உருவாக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் MQB தளத்தில் வந்துள்ள சூப்பர்ப் கார் முந்தைய தலைமுறை மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்டு தோற்றம் வசதிகள் என அனைத்திலும் முற்றிலும் புதிய அம்சங்களை பெற்று விளங்குகின்றது.

தற்பொழுது வரவுள்ள மாடல் முந்தைய மாடலை விட 75 கிலோ எடை குறைவாக  முன்பக்க ஓவர் ஹேங் 61 மிமீ குறைவாகவும் , 28 மிமீ நீளமாகவும் , 47 மிமீ அகலமாக மற்றும் முந்தைய மாடலை விட கூடுதல் இடவசதி தரும் வகையில் 80மிமீ கூடுதல் வீல்பேஸ் பெற்றுள்ளது.

பை ஸெனான் முகப்பு விளக்குகளுடன் பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் , டெயில் எல்இடி விளக்குகள் , பிரிமியம் மற்றும் நவீன வசதிகளை வழங்கும் தொடுதிரை அமைப்புடன் கூடிய ஃபோக்ஸ்வேகன்  MIB ( MIB – Modularer Infotainment-Baukasten) இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேவிகேஷன் , ஆண்டராய்டு , ஆப்பிள் ஆட்டோமோட்டிவ் ஆப்ஸ்களை பயன்படுத்தம் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் 5 பெட்ரோல் மற்றும் 3 டீசல் என்ஜின் ஆப்ஷனில் விற்பனையில் உள்ள ஸ்கோடா சூப்பர்ப் இந்தியாவில் 1.8 லிட்டர் TSI பெட்ரோல் மற்றும் 2.0 TDI என்ஜின் ஆப்ஷனை பெற்றிருக்கும். முன்பக்க டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் வரவுள்ளது. சிகேடி முறையில் விற்பனைக்கு வரவுள்ள சூப்பர்ப் காரின் விலை ரூ.25 லட்சத்தில் தொடங்கும்.