இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள பெனெல்லி நிறுவனம் குறைவான விலை கொண்ட பெனெல்லி டிஎன்டி 25 பைக்கினை டிசம்பர் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.
குறுகிய காலத்தில் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் பெனெல்லி பைக்குகளில் டிஎன்டி 300 மற்றும் டிஎன்டி 600i போன்ற மாடல்கள் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
24.1 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 249.2சிசி லிக்யூடூ கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 21என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்போர்ட்டிவ் தோற்றத்தில் சிறப்பான பெர்ஃபாமென்ஸை தரவல்ல பெனெல்லி TNT 25 பைக்கில் ஒற்றை இருக்கை அமைப்புடன் டிஸ்க் பிரேக் ஆப்ஷனில் உள்ளது . மேலும் ஏபிஎஸ் ஆப்ஷனாலாக வரலாம்.
இந்தியாவிலே சிகேடி முறையில் ஒருங்கிணைக்கப்பட உள்ளதால் விலை ரூ. 2.20 லட்சத்திற்க்குள் இருக்கலாம். கேடிஎம் டியூக் 200 , மோஜோ போன்ற பைக்குகளுக்கு TNT 25 போட்டியாக அமையும்.
Benelli TNT 25 entry level bike to launch December 2015