பென்ட்லி பென்டைகா எஸ்யூவி |
பென்ட்லி பென்டைகா எஸ்யூவி கார் பல சிறப்பு வசதிகளுடன் கூடிய விலை உயர்ந்த அம்சங்களை பெற்றுள்ள சொகுசு எஸ்யூவி காராகும். சொகுசு கார்களின் உச்சகட்ட அம்சங்களுடன் ஆஃப்ரோடு சிறப்புகளை பெற்றுள்ளது.
பென்டைகா எஸ்யூவி காரில் 600பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த W12 ட்வின் டர்போசார்ஜ்டு 6.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 900என்எம் ஆகும். இதில் 8 வேக ZF ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி டாப் ஸ்பீடு மணிக்கு 301கிமீ ஆகும். 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 4.1 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
வட்ட வடிவ முகப்பு விளக்குகளுடன் பென்ட்லி பாரம்பரிய கிரில் தோற்றத்துடன் விளங்கும் பென்டைகா தோற்றத்தில் வெகுவாக கவர்ந்திழுக்கின்றது. பக்கவாட்டிலும் பின்புறத்திலும் ஸ்டைலிசாக பென்டைகா விளங்குகின்றது.
உட்புறத்தில் மரவேலைப்பாடு அம்சங்கள் , உயர்தர லெதர் மற்றும் சிறப்பான மெட்டல் ஃபினிஷிங் செய்யப்பட்டுள்ளது. பென்டைகா காரில் 4 அல்லது 5 இருக்கை ஆப்ஷனில் பெற இயலும்.
8 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் 60ஜிபி ஹார்ட் டிரைவ் சேமிப்பகத்தை பெற்றுள்ளது. மேலும் 10.2 இஞ்ச் அகலம் கொண்ட பென்ட்லி ஆன்ட்ராய்டு டேப்லெட் பொருத்தியுள்ளனர் . இதனை தேவைப்படும் பொழுது தனியாக எடுத்து கொள்ள முடியும்.
பென்ட்லி பென்டைகா எஸ்யூவி காரின் அமெரிக்கா விலை ரூ.1.51 கோடியாகும். இங்கிலாந்து விலை ரூ.1.60 கோடி ஆகும்.
இங்கிலாந்து ராணிக்கு முதல் பென்டைகா காரை டெலிவரி செய்ய உள்ளனராம். இந்த காரினை அவர் மான் வேட்டைக்கு செல்லும்பொழுது பயன்படுத்த உள்ளாராம். இதற்க்கு முன்பு லேண்ட்ரோவர் காரை பயன்படுத்தி வந்துள்ளார்.
பென்டைகா பிரெட்டிலிங் கடிகாரம்
சொகுசு பென்டைகா காரில் பயன்படுத்தப்பட உள்ள பிரெட்டிலிங் கடிகாரம் தங்கத்தால் உருவாக்கியுள்ளனர். இந்த கடிகாரம் மிகவும் தனித்துவமான சிறப்பு அம்சத்தை கொண்டதாகும்.
பென்டைகா பிரெட்டிலிங் கடிகாரம் |
ரோஸ் கோல்டு மற்றும் ஒயிட் கோல்டு என இரண்டு விதமான ஆப்ஷனில் வந்துள்ள கடிகாரத்தில் 8 வைர கற்கள் பதிகப்பட்டுள்ளது. நாம் இருக்கும் இடத்திற்க்கு ஏற்ப நேரத்தை கனிக்கும் வல்லமை கொண்டதாகும். மேலும் ஒவ்வொரு 15 நிமிடத்திற்க்கு ஒருமுறை மூன்று முறை சுழன்று சரியான நேரத்தை காட்டும்.
பென்டைகா முன்பதிவின் பொழுது இந்த கடிகாரத்தை ஆப்ஷனலாக முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த கடிகாரத்தின் விலை ரூ.1.50 கோடியாகும்.
பென்டைகா காரின் விலையும் கடிகாரத்தின் விலையும் ஒன்றாக உள்ளது. உலகின் மிக விலை உயர்ந்த கார் துனைகருவி என்ற பெருமையை பிரெட்டிலிங் கடிகாரம் பெற்றுள்ளது.
பென்ட்லி பென்டைகா படங்கள்