போர்ஷே விளம்பர தூதராக மரியா ஷரபோவா

0
போர்ஷோ ஆடம்பர கார்களின் விளம்பர தூதராக மரியா ஷரபோவா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற போர்ஷே டென்னிஸ் கிரான்ட் பிரிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றார். அவருக்கு  911 கரேரா எஸ் கேப்ரியோல்ட் காரை பரிசாக வழங்கியது.

Maria Sharapova

ரஷ்யாவின்  மரியா ஷரபோவை 3 ஆண்டுகளுக்கான விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்துள்ளது.  இதன் மூலம் சர்வதேச அளவில் போர்ஷோ கார்கள் பிரபலமடையும்.

மரியா ஷரபோவா இதுபற்றி கூறுகையில் இது என் வாழ்நாளில் மிக சிறப்பான நாள். உலகின் தலைசிறந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டதை மிகப் பெரிய கௌவரவமாக கருதுகிறேன்.

Google News

26 வயதான  மரியா ஷரபோவா டென்னிஸ் உலகில் பல சாதனைகளை புரிந்து வருபவர். 17 வயதில் கிரான்ட் ஸ்லாம் போட்டியில் வென்று குறைந்த வயதில் பட்டம் பெற்ற மூன்றாவது வீராங்கனை ஆவார். 28 தனிநபர் பட்டங்களை வென்றுள்ளார்.