இன்டெல் நிறுவனம் ஐடி துறையில் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஆட்டோமொபைல் துறை சார்ந்த ஒரு முயற்சினை மேற்கொண்டுள்ளது. அதாவது மழைக்காலங்களில் மிக தெளிவாக சாலைகள் தெரிவதில் சிக்கல் ஏற்படுவதனால் விபத்து அதிகரிக்கின்றது. இதனை குறைக்கும் வகையில் இன்டெல் புதிய நுட்பத்தை உருவாக்கி வருகின்றது.
முகப்பு விளக்குகளில் கேமரா ஹோஸ்களை இனைக்கப்பட்டிருக்கும். மழை துளி விழும்பொழுது இயல்பாகவே விழும் ஆனால் பாதையை ஓட்டுனர்க்கு காட்டும் பொழுது படத்தில் உள்ளதை போலேவே காட்டும் இதனால் வாகன ஓட்டிக்கு மிக இயலபாக வாகனத்தை இயக்க முடியும். இது ஒரு மாயம் போலத்தான் மழைத்துளி விழும் ஆனால் குறைவாகத்தான் தெரியும்.
இதற்க்காக பிரித்யோகமான ஒரு சிப்பினை உருவாக்கி வருகின்றது. இந்த நுட்பமானது தற்பொழுது சோதனையில் உள்ளது. அடுத்த சில ஆண்டுகளுக்குள் இந்த நுட்பம் உற்பத்தி நிலையை எட்டும் என எதிர்பார்க்கலாம். இந்த தொழில்நுட்பம் வரும்பொழுது மழைக்காலங்களில் ஏற்படும் விபத்தினை பெருமளவு குறைக்க முடியும்.