மஹிந்திரா எலக்ட்ரிக் பிரிவின் சார்பில் மஹிந்திரா இசுப்ரோ மின்சார வேன் ரூ.8.45 லட்சம் விலையில் சரக்கு மற்றும் பயணிகள் என இரண்டுக்கும் ஏற்ற மாடலாக பேட்டரி மின்சாரத்தில் 112 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இசுப்ரோ விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக பார்வைக்கு வந்த இசுப்ரோ வேன் தற்பொழுது விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இசுப்ரோ வேனில் 3-ph, AC இன்டக்ஷ்ன் மோட்டார் பயன்படுத்தப்பட்டு 25 கிலோவாட் ஆற்றலை வெளிப்படுத்தி 70 என்எம் டார்கினை வெளிப்படுத்துகின்றது. ஒற்றை வேக கியர்பாக்சினை பெற்றுள்ள eசுப்ரோ வேனில் கார்கோ மாடல் 115 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாகவும் , 112 கிமீ பயணிக்கும் திறன் கொண்டதாக பயணிகளுக்கான வேன் உள்ளது.
600 கிலோ எடை சுமக்கும் திறனை கொண்ட கார்கோ பாடி மற்றும் 8 பயணிகள் வரை பயணிக்கும் வேனாக விளங்கும் இசுப்ரோ மின்சார வேன் முழுமையாக சார்ஜ் ஆக 8 மணி நேரம் 30 நிமிடங்கள் தேவைப்படும். அவசர தேவை ஏற்பட்டால் ரிவிவ் மோட் வாயிலாக 7 கிமீ கூடுதலாக பயணிக்கலாம்.
சாதரன டீசல் மாடலை விட தோற்ற அமைப்பில் பெரிதாக எந்த மாறுதல்களும் இல்லாமல் எலக்ட்ரிக் பேட்ஜ் மற்றும் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது.
இசுப்ரோ மின்சார வேன் விலை
- மஹிந்திரா இசுப்ரோ (CarGo) – ரூ. 8.45 லட்சம்
- மஹிந்திரா இசுப்ரோ (Passanger) – ரூ. 8.75 லட்சம்
( அனைத்து விலை விபரமும் அரசு வழங்கும் ஃபேம் திட்டத்தின் ( FAME India) சலுகைக்கு பிந்தைய எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை ஆகும் )