குறைந்த விலை மஹிந்திரா எலக்ட்ரிக் எஸ்யூவி தயாராகின்றது

0

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மஹிந்திரா எலக்ட்ரிக் (மஹிந்திரா ரேவா) பிரிவில் விலை குறைந்த மஹிந்திரா எலக்ட்ரிக் எஸ்யூவி காரினை S107 என்ற குறியீட்டு பெயரில்  தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

mahindra_kuv100

Google News

விலை குறைந்த எஸ்யூவி கார் மாடலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மஹிந்திராவின் கேயூவி 100 எஸ்யூவி காரினை அடிப்படையாக கொண்ட மாடலாக விளங்கலாம். மஹிந்திரா நிறுவனம் எலக்ட்ரிக் கார்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்ற நிலையில் மஹிந்திரா e2O மற்றும் வெரிட்டோ செடான் காரின் இவெரிட்டோ போன்ற மாடல்கள் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.

ஃபீளிட் ஆப்ரேட்கர்களுக்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ள  எலக்ட்ரிக் கார்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருவதனை தொடர்ந்து மின்சார கார்கள்தான் எதிர்கால உலகினை தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவதனால் அனைத்து முன்னனி தயாரிப்பாளர்களும் எலக்ட்ரிக் கார்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளதால் இந்திய சந்தையில் தன்னுடைய முழுமையான திறனை வெளிப்படுத்தும் நோக்கில் மஹிந்திரா செயல்பட்டு வருகின்றது.

mahindra_kuv100_rear

மஹிந்திரா , மாருதி சுஸூகி மற்றும் டாடா போன்ற நிறுவனங்களும் கூட்டணியாக எலக்ட்ரிக் கார் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு உண்டான பாகங்களை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது.

Mahindra KUV100 SUV photo gallery

[envira-gallery id=”5460″]

தகவல் உதவி ; இடி ஆட்டோ