மஹிந்திரா எஸ்யூவிகளில் பெட்ரோல் என்ஜின்

0
மஹிந்திரா நிறுவனம் அனைத்து எஸ்யூவி கார்களிலும் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி காரில் முதற்கட்டமாக பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் வரவுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500
மஹிந்திரா எக்ஸ்யூவி500

மஹிந்திரா குழுமத்தின் சாங்யாங் மோட்டார்ஸ் உதவியுடன் ஸ்கார்ப்பியோ எக்ஸ்யூவி500 , டியூவி300 , வரவிருக்கும் கேயூவி100 , வரவிருக்கும் புதிய குவான்ட்டோ ,  போன்ற மாடல்களில் இன்னும் சில வருடங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

யுட்டிலிட்டி ரக விற்பனையில் முன்னனி வகிக்கும் மஹிந்திரா நிறுவனம் தனது அனைத்து மாடல்களிலும் டீசல் என்ஜின் பொருத்தியே விற்பனை செய்து வருகின்றது. பரவலாக பெட்ரோல் வாகனங்களின் மீது ஈர்ப்பு அதிகரித்து வருவதனால் சக போட்டியாளர்களுடன் போட்டியிடும் வகையில் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களை உருவாக்கி வருகின்றது.

மேலும் படிக்க ; மஹிந்திரா டியூவி300 விமர்சனம்

வரவிருக்கும் கேயூவி100 , குவான்ட்டோ மற்றும் சில நாட்களுக்கு முன் விற்பனைக்கு வந்த டியூவி300 போன்ற கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

சாங்யாங் டிவோலி
சாங்யாங் டிவோலி 

சாங்யாங் டிவோலி காரில் பொருத்தப்பட்டள்ள 162பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரில் பொருத்தப்படலாம். எக்ஸ்யூவி500 காரின் பெட்ரோல் மாடல் சோதனை ஓட்டத்தில் உள்ளது. இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டலாம் என தெரிகின்றது.

Mahindra to launch Petrol models in all of their SUV