Automobile Tamil

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி வாங்கலாமா ?

எஸ்யூவி கார்களின் தோற்றத்தில் மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி கார் ஹேட்ச்பேக் கார்களுக்கு கடுமையான சவாலினை தரும் வகையில் கேயூவி100 எஸ்யூவி விலை மற்றும் வசதிகள் போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.

mahindra-kuv100-suv
மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி

முதன்முறையாக பெட்ரோல் என்ஜினுக்குள் முழுமையாக நுழைந்துள்ள மஹிந்திரா நிறுவனம் பெட்ரோல் பிரியர்களையும் தன்னோடு இனைத்து கொண்டுள்ளது. டீசல் கார்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த வந்த நிலையில் சிறிய கார் என்பதனாலும் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்களை புதிய எம் ஃபால்கன் சீரிஸ் என்ஜினை அறிமுகப்படுத்தியுள்ளது.

தோற்றம்

மஹிந்திராவின் வளமையான எஸ்யூவி தாத்பரியங்களில் எக்ஸ்யூவி500 காரின் உந்துதலிலும் மஹிந்திரா சாங்யாங் டிவோலி காரின் தாக்கத்தையும் கொண்டு சிறியரக மாடலாக ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான விலையில் வடிவமைக்கப்பட்டுள்ள கேயூவி100 எஸ்யூவி காரின் முகப்பு தோற்றம் மிகவும் கவர்ச்சிகரமாக பாரம்பரிய கிரிலை சிறியதாக கொடுத்துள்ளது.

முகப்பு பம்பர் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள முன்பக்க கருப்பு நிற இரட்டை வண்ணத்தில் கவர்ச்சியாக அமைந்து பனி விளக்குகள் பகுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முகப்பு விளக்குகளுடன் அமைந்துள்ள பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் நவீன மாடலுக்கு ஏற்ற ஸ்டைலுடன் அமைந்துள்ளது. முகப்பு விளக்குடன் நீட்டிக்கப்பட்டுள்ள கருப்பு நிற கிளியர் கிளாசில் கேயூவி100 மற்றும் எம் ஃபால்கன் பேட்ஜ் பதிக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் 14 இஞ்ச் அலாய் வீல் மல்டி ஸ்போக்குகளுடன் கவர்ச்சியான கருப்பு நிற பாடி கிளாடிங் மற்றும் வீல் ஆர்ச்சில் கொடுக்கப்பட்டுள்ள கிளாடிங் மற்றும் ரியர் டோர் கதவில் செவர்லே பீட் காரில் உள்ளதை போன்ற பின்புற வீன்டோவில் உள்ள கதவு கைப்பிடிகள் , இதனை தவிர கவர்ந்திழுக்கும் புர்ஃபைல் கோடுகள் பின்புறம் வரை நீண்டுள்ளது.

 

 

பின்புற டெயில் விளக்குகளுக்கு மேல் முடிவையும் பக்கவாட்டில் உள்ள கோடுகள் மிக நேர்த்தியாக உள்ளது. கிளியர் வீயூ கொண்ட பின்புற விளக்குகள் இரட்டை வண்ண பின்புற பம்பர் போன்றவை மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி காரின் தோற்ற பொலிவினை கவர்ந்திழுக்கும் வகையில் அமைய காரணமாக உள்ளது.

உட்புறம்

இன்டீரியர் தோற்றத்தில் சிறப்பான மாறுதல்களை கடந்த சில மாடல்களாகவே மஹிந்திரா கையாண்டு வருகின்றது. முந்தைய  மாடலான டியூவி300 இன்டிரியர் பெரிதும் பேசப்பட்டது. அதே பானியில் சிறப்பான கட்டுமானத்துடன் அமைந்துள்ள மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி காரின் உட்புறம் போட்டியாளர்களை விட கூடுதல் அம்சங்கள் மற்றும் இருக்கைகளை பெற்றுள்ளது.

இடவசதிக்காக டேஸ்போர்டில் அமைக்கப்பட்டுள்ள கியர் ஷிஃப்ட் லிவர் மற்றும் பார்க்கிங் பிரேக் லிவர் போன்றவை சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளது. இரட்டை வண்ண ஃபீனிஷ் செய்யப்பட்ட டேஸ்போர்டில் இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம் மோனோக்ரோம் கலரில் அமைந்துள்ளது.

5 மற்றும் 6 இருக்கைகள் ஆப்ஷன் என்பது பலரையும் கவரும விதமாக உள்ளது. பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 6 இருக்கை மாடல்கள் நமக்கு தேவையான பொழுது 6 இருக்கைகளை பயன்படுத்திகொள்ளலாம். இல்லையென்றால் முன்பகத்தில் உள்ள இருக்கை அமைப்பினை ஹேண்ட் ரெஸ்டாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால் சற்று அகலமான பெரிய ஹேண்ட் ரெஸ்டாக இருக்கும் என்பதனால் சிலருக்கு சவுகரியப்படாது.

எங்கெல்லாம் ஸ்டோரேஜ் வசதி தரமுடியுமோ அங்கெல்லாம் பொருகளை வைப்பதற்க்கான வசதியை ஏற்படுத்தியுள்ளனது வரவேற்க்க தக்க ஒன்றாகும். முன்பக்க கோடிரைவர் இருக்கை அடியில் மற்றும் பின்புற இருக்கையின் அடிதளத்தில் ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் 243 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொடுக்கப்படிருக்கின்றது . பின்புற இருக்கைகளை மடக்கும் பட்சத்தில் 473 லிட்டர் கொள்ளளவு வரை கேயூவி100 காரில் விரிவடையும்.

சிறப்பான லெக்ரூம் , ஹெட் ரூம் , தரம் நிறைந்த இன்டிரியர் பாகங்களை பெற்றுள்ள நிலையில் அனைத்து ஆப்ஷனல் வேரியண்டிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் நிரந்தர அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது. இது நல்லதொரு ஆரம்பமாக கருதப்பட வேண்டிய விடயமாகும்.

அளவுகள் 

நீளம் : 3675 மிமீ

அகலம் : 1705  மிமீ

உயரம் : 1635 மிமீ

வீல்பேஸ் : 2385 மிமீ

கிரவுண்ட் கிளியரன்ஸ் : 170 மிமீ

பூட் ஸ்பேஸ் : 243 லிட்டர் (473 லிட்டர் விரிவடையும்)

எரிபொருள் அளவு : 35 லிட்டர்

இருக்கை : 3+3 = 6 இருக்கை , 2+3 = 5 இருக்கை

என்ஜின்

82 bhp @ 5500 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கன் G80 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 Nm 3500 முதல் 3600 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

77 bhp @ 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கன் D75 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் KUV100  எஸ்யூவி காரில் பவர் மற்றும் இக்கோ மோட் உள்ளது.

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் டீசல் மைக்ரோ எஸ்யூவி காராக மஹிந்திரா கேயூவி100 விளங்குகின்றது. டீசல் மஹிந்திரா கேயூவி 100 எஸ்யூவி காரின் மைலேஜ் லிட்டருக்கு 25.83 கிமீ ஆகும். மேலும் பெட்ரோல் கேயூவி100 காரின் மைலேஜ் லிட்டருக்கு 18.15 கிமீ ஆகும்.

மேலும் மைக்ரோ ஹைபிரிட் ஆப்ஷனும் இணைக்கப்பட்டுள்ளது. சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக விளங்கும் என்ஜின்களில் டீசல் என்ஜினில் மைலேஜ் அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

மஹிந்திராவின் கேயூவி100 எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான ஆப்ஷனிலும் சிறப்பான செயல்திறன் மற்றும் ஆற்றல் வாகனத்தினை  கையாளுவதில் நல்ல அனுபவத்தினை வழங்குகின்றது. முன்பக்கத்தில் டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்றவை அனைத்து வேரியண்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

டீசல் காரில் பவர் மற்றும இக்கோ மோட் , மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டம்  , 5 மற்றும் 6 இருக்கை ஆப்ஷன் , ஏபிஎஸ் , இபிடி , ஏர்பேக் , ஃபாலோ மீ , லீ மீ விளக்குகள் , எல்இடி விளக்கு  மஹிந்திரா புளூ சென்ஸ் ஆப் என பலவற்றை பெற்றுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி காரின் அனைத்து வேரியண்டில் ஏபிஎஸ் மற்றும் இபிடி  அம்சங்கள் உள்ளன. மேலும் ஆப்ஷனலாக உள்ள ப்ளஸ் வேரியண்டில் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் உள்ளன.

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி

போட்டியாளர்கள்

கிராண்ட் ஐ10 , வேகன்ஆர் , ஸ்விஃப்ட் , போல்ட் என தொடக்கநிலை காம்பேக்ட் ஹேட்ச்பேக் கார்கள் அனைத்திற்கும் மிகுந்த சவாலாக மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி அமைந்துள்ளது.

மஹிந்திரா கேயூவி 100 எஸ்யூவி விலை

மஹிந்திரா KUV100 பெட்ரோல் விலை விபரம்

KUV100 K2 (6 str) – ரூ. 4,53,932

KUV100 K2+ (6 str) – ரூ. 4,76,323

KUV100 K4  (5 str) – ரூ. 4,89,554

KUV100 K4  (6 str) – ரூ. 4,94,554

KUV100 K4+ (5 str ) – ரூ. 5,11,935

KUV100 K4+ (6 str ) – ரூ. 5,17,034

KUV100 K6  (5 str) – ரூ. 5,49,603

KUV100 K6 (6 str) – ரூ. 5,54,692

KUV100 k6+ (5 str ) – ரூ. 5,71,994

KUV100 K6+ (6 str ) – ரூ. 5,77,083

KUV100 K8 (5 str ) – ரூ. 6,05,581

KUV100 K8 (6 str ) – ரூ. 6,10,670

Mahindra KUV100 Petrol Prices (ex-showroom, Chennai )

 

மஹிந்திரா KUV100  டீசல் விலை விபரம்

KUV100 K2 (6 str) – ரூ. 5,35,354

KUV100 K2+ (6 str) – ரூ. 5,57,745

KUV100 K4  (5 str) – ரூ. 5,70,977

KUV100 K4  (6 str) – ரூ. 5,76,065

KUV100 K4+ (5 str ) – ரூ. 5,93,368

KUV100 K4+ (6 str ) – ரூ. 5,98,457

KUV100 K6  (5 str) – ரூ. 6,36,114

KUV100 K6 (6 str) – ரூ. 6,41,203

KUV100 k6+ (5 str ) – ரூ. 6,58,505

KUV100 K6+ (6 str ) – ரூ. 6,63,594

KUV100 K8 (5 str ) – ரூ. 6,97,181

Mahindra KUV100 Diesel Prices (ex-showroom, Chennai )

6 str –  6 இருக்கை , 5 str – 5 இருக்கை

கேயூவி100 எஸ்யூவி வாங்கலாமா ?

ஹேட்ச்பேக் கார்களில் எஸ்யூவி ஸ்டைலாகவும் நேர்த்தியான அம்சங்களுடன் மஹிந்திரா கேயூவி 100 எஸ்யூவி விளங்குகின்றது. மிக சவாலான விலையில் வந்த கேயூவி100 காரை தாரளமாக வாங்கலாம். ஹேட்ச்பேக் கார்களில் சிறப்பான  பாதுகாப்பு  அம்சங்களுடன் வந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் 4 விதமான வேரியண்டில் 5 மற்றும் 6 இருக்கை ஆப்ஷன் உள்ளது. மாதம் 10000 கார்களை வரை விற்பனை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

[envira-gallery id=”5460″]

 

Exit mobile version