மஹிந்திரா இலகுரக வர்த்தக வாகன பிரிவில் விற்பனையில் உள்ள மஹிந்திரா ஜீடூ மினி டிரக்கில் சிஎன்ஜி ஆப்ஷன் மாடல் ரூ. 3.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
டாப் X716 வேரியன்டான 700 கிலோ எடை தாங்கும் திறன் கொண்ட மாடலில் ஜீடூ சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 33 கிலோமீட்டர் மைலேஜ் தரவல்ல மாடலாக விளங்கும்.
கடந்த ஜூன் 2015யில் விற்பனைக்கு வந்த ஜீடூ அமோக வவேரவேற்பினை பெற்ற மாடலாக 1 டன்னுக்கு குறைவான எடை தாங்கும் பிரிவில் முன்னனி வகிக்கின்றது. சிஎன்ஜி ஆனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஏற்ற வகையிலும் மற்றும் சுற்றுசூழலுக்கு ஏற்றதாக அமையும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.
மஹிந்திரா ஜீடூ டீசல்
மேலும் ஜீடு டிரக்கில் 625சிசி எம்-டியூரா டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 11எச்பி மற்றும் 16 எச்பி என இரண்டு விதமான சக்தியில் கிடைக்கும். இதன் முறுக்கு விசை 38என்எம் ஆகும். ஜீடூ மினி டிரக் மைலேஜ் லிட்டருக்கு 36.7கிமீ ஆகும்.
டீசல் மாடல்களில் 11ஹெச்பி ஆற்றல் வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ள மாடல்கள் 600 கிலோ எடைதாங்கும் திறனும். டீசல் மாடல்களில் 16ஹெச்பி ஆற்றல் வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ள மாடல்கள் 700 கிலோ எடைதாங்கும் திறனும் பெற்றுள்ளது.
மஹிந்திரா ஜீடு சிஎன்ஜி விலை ரூ. 3.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)