நகரம் மற்றும் புறநகர் மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மஹிந்திரா ஜீட்டோ மினிவேன் ரூ. 3.45 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஜீதோ பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி போன்ற தேர்வுகளில் கிடைக்க உள்ளது.
மஹிந்திரா ஜீட்டோ மினிவேன்
மினிவேன்மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜீட்டோ மாடல்கள் நகரம் மற்றும் புறநகர பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்ற வகையிலான மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் ஆப்ரேட்ர்களுக்கும் ஏற்றதாக விளங்கும் என மகேந்திரா & மகேந்திரா தெரிவித்துள்ளது.
16hp ஆற்றல் மற்றும் 38 Nm வெளிப்படுத்தும் m_Dura பிஎஸ் 4 டைரக்ட் இன்ஜெக்ஷன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஜீட்டோ மினிவேன் மைலேஜ் லிட்டருக்கு 26 கிமீ ஆகும். உறுதியான மேற்கூறை கட்டமைப்பு மற்றும் சாஃப்ட்ரூஃப் மேற்கூறை என இரு வகைகளில் கிடைக்கின்ற இந்த மாடலில் டீசல் மட்டுமலாமல் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளிலும் கிடைக்கின்றது.
இன்டிரியர் அமைப்பில் டேஸ்போர்டில் இருவகையான வண்ண கலவை நிறங்கள் மற்றும் முன்பக்கத்தில் பக்கெட் இருக்கை போன்றவற்றை பெற்றுள்ள ஜீட்டோ வேனில் சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களுடன் கிடைக்கின்றது.
2 வருடம் அல்லது 40,000 கிமீ வரை வாரண்டி வழங்கப்பட்டுள்ள ஜீட்டோ மினிவேன் ஆரம்ப விலை ரூ. 3.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் மும்பை) ஆகும்.