மஹிந்திரா ஜீதோ மினிடிரக் விற்பனை அமோகம்

0

மஹிந்திரா வர்த்தக வாகனப் பிரிவில் வெளிவந்த மஹிந்திரா ஜீதோ இலகுரக மினி டிரக் வாயிலாக 20 சதவீத பங்கினை மஹிந்திரா இலகுரக மினி டிரக் பிரிவில் பெற்றுள்ளது. மஹிந்திரா ஜீதோ ஆரம்ப விலை ரூ. 2.70 லட்சம் ஆகும்.

mahindra-jeeto

Google News

கடந்த ஜூன் 2015 ஆம் வருடத்தில் மஹிந்திரா ஜீதோ மினிடிரக் விற்பனைக்கு வெளியிடப்பட்ட கடந்த ஒரு வருடத்தில் 24,000 டிரக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  மஹிந்திரா ஜீடு இரு விதமான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

625சிசி எம்-டியூரா டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் ஆற்றல் 11 hp மற்றும் 16 hp என இரண்டு விதமான சக்தியில் கிடைக்கும். இதன் டார்க் 38Nm ஆகும். மஹிந்திரா ஜீதோ மினி டிரக் மைலேஜ் லிட்டருக்கு 36.7கிமீ ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

600கிலோ சுமை தாங்கும் திறன் மற்றும் 700கிலோ சுமை தாங்கும் திறன் என இரண்டுவகையான பிரிவில் 600கிலோ பேலோட் பிரிவில் 11எச்பி என்ஜினும் 16எச்பி ஆற்றலை தரும் என்ஜின் 700கிலோ பிரிவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா ஜீதோ முழுவிபரம்

ஜீதோ முதல் வருட கொண்டாடத்தை ஒட்டி சிறப்பு எக்ஸ்சேஞ்ச் சலுகை ரூ.20,000 வரை மஹிந்திரா வழங்குகின்றது.

டாடா ஏஸ் டிரக்கை வீழ்த்தும் ஜீதோ

டாடா ஏஸ் மாடலுக்கு நேரடியான போட்டி மாடலாக களமிறங்கிய ஜீதோ விலையில் குறைவாகவும் , எடை திறனில் இனையாகவும் மைலேஜில் சிறப்பாக அமைந்து மிக சிறப்பான வரவேற்பினை பெற்று இலகுரக டிரக பிரிவில் 20 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ளது.இதே காலகட்டத்தில் டாடா ஏஸ் 10 சதவீத சந்தை மதிப்பினை இழந்துள்ளது.

tata-ace-ht

கடந்த ஜூன் 2015யில் இலகுரக டிரக் சந்தையில் மேக்சிமோ மற்றும் ஜீதோ இருமாடல்களுடன் 8 சதவீத சந்தை மதிப்பை  கொண்டிருந்த மஹிந்திரா ஜூன் 2016 முடிவில் 21.30 சதவீத பங்கினை பெற்றுள்ளது. இதே காலகடத்தில் டாடா ஏஸ் ,ஜிப் , போன்ற மாடல்களுடன் 86 சதவீத சந்தை மதிப்பில் இருந்து ஜூன் 2016யில் 76 சதவீதமாக குறைந்துள்ளது. மற்றொரு போட்டியாளரான பியாஜியோ ஏப் மினி மற்றும் ஏப் மாடல் 3 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ளது.

 

மேலும் தற்பொழுது இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி இலகுரக வர்த்தக வாகன பிரிவில் மாருதி சூப்பர்கேரி மாடலை அறிமுகம் செய்துள்ளதால் சந்தையின் நிலை வேறுவிதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Maruti-Suzuki-Super-Carry