மஹிந்திரா டியூவி300 எஸ்யுவி ஏஎம்டி வருமா ?

0
மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார் வரும் செப்டம்பர் 10ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வரவுள்ளது. மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார் விலை ரூ.7 லட்சம் முதல் 11 லட்சத்திற்க்குள் இருக்கும்.
மஹிந்திரா டியூவி300

மஹிந்திரா டியூவி300 காருக்கு ரூ.20,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். டாங்கி தோற்றத்தின் உந்துதலில் உருவாகி உள்ள மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி பாக்ஸ் டைப் வடிவில் உள்ளது.

முகப்பு தோற்றத்தில் மிக சரிவான கோணத்தில் தனது பாரம்பரிய கிரிலை மேருகேற்றியுள்ளது. முகப்பு விளக்கு ஸ்டைலிஸாக உள்ளது. பனி விளக்கினை பாக்ஸ் வடிவ சதுரத்தில் கொண்டு வந்துள்ளது.

பக்கவாடில் சிறப்பான தோற்றத்தினை வழங்கும் கோடுகள் , 10 ஸ்போக்குகளை கொண்ட ஆலாய் வீல் போன்றவற்றை பெற்றுள்ளது. பின்புறத்தில் குவான்ட்டோவை அப்படியே பெற்றுள்ளது. இதுதான் பரவலாக கவரவில்லை.

உட்புறத்தில் இரட்டை வண்ண டேஸ்போர்ட் பெற்றிருக்கும். மேலும் புதிய ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 காரின் பல அம்சங்களை பெற்றிருக்கும். மேலும் தொடுதிரை , ஸ்டீயரிங் கன்ட்ரோல் ஆப்ஷன் , ஸ்மார்ட் போன் தொடர்பு போன்றவற்றை பெற்றிருக்கும்.

குவான்ட்டோ காரில் பயன்படுத்தப்பட்டிருந்த அதே 1.5 லிட்டர் என்ஜினின் புதிய தலைமுறை எம் ஹாக் 80 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி காரின் போட்டியாளர்களாக க்ரெட்டா , டஸ்ட்டர் , ஈக்கோஸ்போர்ட் மற்றும் வரவிருக்கும் மாருதி இக்னிஸ் போன்றவை விளங்கும்.

Mahindra TUV300 AMT