மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி காரின் சிறப்புகள்

0
மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி காரின் சிறப்பம்சங்களை இந்த செய்தி தொகுப்பில் கானலாம். மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி காரில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன ?

மஹிந்திரா டியூவி300
மஹிந்திரா டியூவி300

டியூவி300 எஸ்யூவி கார் மிக நேர்த்தியான பாக்ஸ் டைப் வடிவத்தில் 4 மீட்டருக்குள் மிக கம்பீரமான காம்பேக்ட் எஸ்யூவியாக காட்சியளிக்கின்றது. ஈக்கோஸ்போர்ட், க்ரெட்டா , டஸ்ட்டர் போன்ற கார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும்.

 மஹிந்திரா டியூவி300 சிறப்புகள்

 
 • பாக்ஸ் டைப் ஸ்டைலில் நேர்த்தியான கட்டமைப்புடன் விளங்கும் மிகவும் உறுதியான அடிச்சட்டம் மற்றும் பாகங்களை கொண்டு விளங்குகின்றது
 • மற்ற போட்டியாளர்களை விட டியூவி300 கூடுதல் வீல்பேஸ் மற்றும் 7 இருக்கைகள் கொண்டுள்ளது. இதன் பூட் ஸ்பேஸ் 384 லிட்டர் பின்புற ஜம்ப் இருக்கைகளை மடக்கினால் 720 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கும்.
 • டியூவி300 காரில் 84பிஎச்பி (81பிஎச்பி ஏஎம்டி) ஆற்றலை வெளிப்படுத்தும் 2 கட்ட டர்போசார்ஜரை கொண்ட புதிய எம்ஹாக் 80 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 230என்எம் ஆகும்.
 • 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.
 • டியூவி 300 கார் மைலேஜ் லிட்டருக்கு 18.49 கிமீ ஆகும்.
 • மொத்தம் 7 வேரியண்ட்கள் அவை T4 , T4+ , T6 , T6+ , T6+ AMT , T8 ,  T8 AMT போன்றவை ஆகும்.
 • இவற்றில் T4 , T6 வேரியண்டினை தவிர்த்து மற்ற அனைத்து வேரியண்டிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் இபிடி , போன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது.
 • டாப் வேரியண்டில் குறிப்படதக்க அம்சங்களாக ஸ்டேட்டிக் முகப்பு விளக்குகள் , இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , மஹிந்திரா பூளூ சென்ஸ் ஆப் , ரிவர்ஸ் பார்க் அசிஸ்ட் , குரல் வழி கட்டளை , ஃபாலோ மீ முகப்பு விளக்கு , மைக்ரோ ஹைபிரிட் ,ஈக்கோ மோட்  போன்றவை முக்கியமானவையாகும்.
 •  ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் காம்பேக் ரக பிரிவில் நுழைந்துள்ள முதல் எஸ்யூவி காராக டியூவி300 விளங்குகின்றது.இதன் மூலம் நெரிசல் மிகுந்த சாலையிலும் எளிதாக பயணிக்க முடியும். T6+ AMT மற்றும்  T8 AMT என இரண்டு வேரியண்டில் ஏஎம்டி கிடைக்கும்.
 •  டைனமோ சிவப்பு, மெஜஸ்டிக் சில்வர், போல்டு கருப்பு, மால்டென் ஆரஞ்ச் , வெர்வ் நீளம் மற்றும் க்ளேசியர் நீளம் என மொத்தம் 6 வண்ணங்களில் கிடைக்கும்.
 • மிக முக்கியமான ஒன்று விலை மஹிந்திரா டியூவி300 மற்ற காம்பேக்ட் ரக எஸ்யூவிகளை விட குறைவான விலையில் மிகவும் தரமான காம்பேக்ட் ரக எஸ்யூவி என்ற பெயரை பெற்றுள்ளது.
மஹிந்திரா டியூவி300
மஹிந்திரா டியூவி300

மஹிந்திரா டியூவி300 கார் விலை

 
 • டியூவி300 T4  : ரூ. 8.16 லட்சம்
 • டியூவி300 T4+  : ரூ.8.56 லட்சம்
 • டியூவி300 T6  : ரூ.8.91 லட்சம்
 • டியூவி300 T6+  : ரூ.9.23 லட்சம்
 • டியூவி300 T6+ AMT  : ரூ.10.06 லட்சம்
 • டியூவி300 T8  : ரூ.9.92 லட்சம்
 • டியூவி300 T8 AMT  : ரூ.10.75 லட்சம்
 
(டியூவி300 சென்னை ஆன்ரோடு விலை)
Mahindra TUV300 SUV features