புதிய மஹிந்திரா டியூவி500 எம்பிவி சோதனை ஓட்டம் – இனோவா காருக்கு எதிராக

0

இனோவா க்ரிஸ்டா காருக்கு நேரடியான போட்டியை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய மஹிந்திரா டியூவி500 எம்பிவி காரின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மஹிந்திராவின் TUV500 எம்பிவி சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

mahindra-xylo-mpv

 

இன்னோவா காருக்கு நேரடியான போட்டியாளர்கள் என்று எந்த மாடலும் இல்லாத நிலையில் டாடா நிறுவனத்தின் புதிய ஹெக்ஸா மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் பெயர் தெரியாத மாடலாக சோதனை ஓட்டத்தில் உள்ள மாடலுக்கு டியூவி500 என பெயர் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முற்றிலும் மாறுபட்ட புதிய தளத்தில் மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் வடிவமைப்பு அமைந்தள்ளது. எக்ஸ்யூவி500 காரின் அடிப்படையிலான தாத்பரியங்களை கொண்டு மஹிந்திரா மற்றும் சாங்யாங் நிறுவனத்தின் கூட்டணியில் வடிவமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முக்கிய டிசைன் மற்றும் இன்டிரியர் வடிவமைப்பு வேலைப்பாடுகளில் பின்னின்ஃபாரினா டிசைன் ஸ்டூடியோ பின்னனியில் இருக்கலாம்.

 

டியூவி500 எம்பிவி காரில் மேம்படுத்தப்பட்ட 2.2 லிட்டர் எம்ஹாக் 140 hp ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின்பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ இடம்பெற்றிருக்கலாம். மேலும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் இடம்பெற்றிருக்கலாம். அடுத்த வருடத்தின் தொடக்கத்தில்  சந்தையில் எதிர்பார்க்கலாம். மேலும் மஹிந்திரா சைலோ சந்தையிலிருந்து விடுவிக்கப்படலாம்.