மஹிந்திரா மோஜோ பைக்கில் ஏபிஎஸ் விரைவில்

0
மஹிந்திரா மோஜோ பைக் அறிமுக விலையாக ரூ.1.58 லட்சத்தில் விற்பனைக்கு வந்து பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. மோஜோ பைக்கில் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷன் மாடலை விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

மஹிந்திரா மோஜோ பைக்
மஹிந்திரா மோஜோ பைக்

ஏபிஎஸ் பிரேக் பொருத்தப்பட்ட மாடல் தற்பொழுது உற்பத்தி நிலையில் உள்ளது. மிக விரைவில் மோஜோ ஏபிஎஸ் மாடல் டீலர்களை வந்தடையும். மேலும் முதற்கட்டமாக 4 பெருநகரங்களில் மட்டுமே மோஜோ விற்பனையில் உள்ளது. மற்ற பெரு நகரங்களில் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் மோஜோ பைக் எதிர்பார்க்கப்படுகின்றது.

27 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 295சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 30என்எம் ஆகும் இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

சிறப்பான ஸ்போர்ட்டிவ் டூரிங் ரக மாடலாக வந்துள்ள மோஜோ பைக்கின் முன்புறம் 320மிமீ மற்றும் பின்புறம் 240மிமீ டிஸ்க்கினை பெற்றுள்ளது. இன்னும் சில மாதங்களில் ஏபிஎஸ் மாடல் வரவுள்ளது.

தீபாவளி வரை மட்டுமே இந்த விலை இருக்கும் . அதன் பின்பு மஹிந்திரா மோஜோ பைக்கின் விலை அதிகரிக்கப்பட உள்ளது.

Mahindra Mojo gets ABS variant very soon