மஹிந்திரா மோஜோ பைக் வரும் அக்டோபர் மாதத்தின் மத்தியில் சந்தைக்கு வரவுள்ளது. மோஜோ பைக் மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய பைக்காக விளங்கும்.
மஹிந்திரா மோஜோ பைக் |
மோஜோ நேக்டு ஸ்டீரிட் பைக் கடந்த 2010ம் ஆண்டில் முதன்முறையாக காட்சிபடுத்தப்பட்டிருந்து. அதனை தொடர்ந்து பல கட்ட நோதனைகளை கடந்த தற்பொழுது மோஜோ பைக் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா மோஜோ முக்கிய விபரங்கள்
- மோஜோ பைக்கில் 27பிஎச்பி ஆற்றலை வழங்கும் 300சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் முறுக்குவிசை 30என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- மோஜோ பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 150கிமீ முதல் 160கிமீ வரை இருக்கலாம்.
- எல்இடி பகல் நேர விளக்கு , இரட்டை பிரிவு முகப்பு விளக்கு , எல்இடி டெயில் விளக்குகள் மற்றும் இரட்டை புகைப்போக்கி போன்றவற்றை பெற்றுள்ளது.
- முன்புறத்தில் அப்சைட் டவுன் ஃபோர்க்குகளும் , பின்பக்கத்தில் மோனோ சாக் அப்சர்பரும் பொருத்தப்பட்டிருக்கும்.
- முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.
- முன்புறத்தில் 110/70/ZR17 மற்றும் 150/60/ZR17 பின்புறத்தில் பைரேலி டையப்லோ ரோஸ்ஸோ டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
- மோஜோ பைக்கிற்க்கு 10,000 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.
- மஹிந்திரா மோஜோ பைக் வரும் அக்டோபர் 13ந் தேதி விற்பனைக்கு வரலாம்.
- மஹிந்திரா மோஜோ பைக் விலை ரூ.1.60 லட்சம் முதல் 1.75 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.
- மோஜோ போட்டியாளர்கள் கேடிஎம் டியூக்200 மற்றும் ஹோண்டா சிபிஆர்250ஆர் ஆகும்.
Upcoming Mahindra Mojo bike details