மஹிந்திரா ரேவா e2o கார் வாங்கலாமா

மஹிந்திரா ரேவா அறிமுகம் செய்துள்ள e2o எலெக்ட்ரிக் கார் ஏன் வாங்க வேண்டும். ரேவா e2o கார் வாங்கினால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
ரேவா e2o காரின் சிறப்புகள்
மஹிந்திரா ரேவா e2o காரில் உள்ள வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளை முழுமையான பகிர்வாக முன்பே பார்த்தோம் அந்த பதிவினை படிக்க க்ளிக் பன்னுங்க..
e2o காரின் வேகம் மற்றும் பயணம்
மஹிந்திரா e2o காரில் உச்சகட்ட வேகம் மணிக்கு 81கீமி ஆகும். மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கீமி தூரம் வரை பயணிக்கலாம். மேலும் 4 பெரியவர்கள் இலகுவாக அமர்ந்து பயணிக்க முடியும். 
போக வர 100 கீமி தூரம் வரை உள்ள அலுவலக பணியாளர்களுக்கு ஏற்ற மிக சிறப்பான கார் ஆகும். குடும்பத்துடன் பயணிக்கவும் ஏற்ற காராகும்.
mahindra e2o front view
e20 காரின் செலவு
மிக குறைவான செலவுதான். மேலும் 1 கீமி தூரம் பயணிக்க வெறும் 0.50 பைசா மட்டுமே என மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள முக்கியமான எரிபொருள் நிரப்பும் இடங்களில் சார்ஜ் நிலையங்களை அமைத்து வருகின்றது. பேட்டரி பராமரிப்பு என்பதே இந்த காரில் கிடையாது என உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் முதல் வருடத்திற்க்கான பரமாரிப்பு இலவசம் ஆகும்.
e2o கார் இயற்கையின் நண்பன்
5C  கோட்பாடுகளை கொண்டு இந்த காரினை உருவாக்கியுள்ளனர். e2o என்றால் சூரியனில் இருந்து நேரடியாக ஆற்றலை பெற்று இயங்கும் காராகும்.
e—சூரியனில் இருந்து  2— காரின் தொழில்நுட்பம், o—-ஆக்சிஜன் ஆகும். 
சூற்று சூழல் பாதிப்பினை தவிர்க்கலாம்.
 ரேவா  e2o கார் வாங்கலாமா
ஆரம்பத்தில் முதலீடு அதிகம் என்பது போல தெரிந்தாலும் பெட்ரோல் டீசல் செலவினை விட மிக குறைவாகவும் இருக்கும். 1 கீமி பயணிக்க 0.50 பைசா போதமானது. ஆனால் பெட்ரோல் காரில் குறைந்தபட்சம் 5.50 ரூபாய் தேவை. பராமரிப்பு என்பதும் குறைவாக இருக்கும். பாதுகாப்பானதாகவும் இருக்க ஐரோப்பாவின் பாதுகாப்பு விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குடும்பத்துடன் குறைவான தூரம் பயணிக்கவும் ஏற்ற காராகும். அலுவலகத்திற்க்கு ஏற்ற காராகும்.
e2o காரின் விலை
முதல் கட்டமாக 8 முன்னணி நகரங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. புதுதில்லி ஆன்ரோடு விலை ரூ 5.96 இலட்சம் ஆகும். தில்லி அரசு வரி குறைப்பினை தந்துள்ளது.
தமிழகத்தில் எப்பொழுது விற்பனைக்கு வரும் என்பதில் உறுதியான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை…
மஹிந்திரா ரேவா கார் பற்றி வெளிவந்த அனைத்து பதிவுகளும் கீழே..
மஹிந்திரா ரேவா e2o
Exit mobile version