மஹிந்திரா வெரிட்டோ வைப் ஹேட்ச்பேக் கார் ரூ.5.63 லட்சத்தில் அறிமுகம் செய்துள்ளனர். டீசலில் மட்டுமே வைப் கிடைக்கும். 3 விதமான மாறுபட்டவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வைப் எடியாஸ் லீவா, செயில் யுவா போன்ற கார்களுக்கு சவாலாக விளங்கும்.
செடான் பிரிவில் வெளிவந்த வெரிட்டோ காரை 4 மீட்டருக்குள் குறைத்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. ரெனோ கே9கே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருககும். இதன் ஆற்றல் 64 பிஎச்பி மற்றும் டார்க் 180என்எம் ஆகும்.
மஹிந்திரா வெரிட்டோ வைப் மைலேஜ் லிட்டருக்கு 20.8கிமீ ஆகும். டாப் வேரியண்டில் ஏபிஎஸ், காற்றுப்பைகள் என பாதுகாப்பு வசதிகள் உள்ளன. மேலும் யூஎஸ்பி, பூளூடூத் இனைப்பு, டீஃபோக்கர் போன்றவை உள்ளன.
மஹிந்திரா வெரிட்டோ வைப் விலை(எக்ஸ்ஷரூம் மும்பை)
டி2 ரூ.5.63 லட்சம்
டி4 ரூ.5.89 லட்சம்
டி6 ரூ.6.49 லட்சம்