மஹிந்திரா வெரிட்டோ வைப் சிறப்பு பார்வை

0
மஹிந்திரா வெரிட்டோ செடான் காரை அடிப்படையாக கொண்ட வெரிட்டோ வைப் ஹேட்ச்பேக் என்று சொல்வதற்க்கு பதிலாக சிறிய செடான் என சொல்லாலம். மஹிந்திராவின் நோக்கம் வெரிட்டோவை 4 மீட்டரூக்குள் கொண்டு வரவேண்டும் என்பதாகவே இருந்துள்ளது.

மஹிந்திரா வெரிட்டோ வைப்

3991மிமீ நீளமுள்ள வைப் சிறிய செடான் கார் வாங்க விரும்புபவர்கள் அதற்க்கு மாற்றாக வெரிட்டோ வைப் காரினை வாங்கலாம். செடான் கார்களுக்கு இனையான 330 லிட்டர் பூட் இடவசதியை தந்துள்ளது.

பூட் வசதி அதிகம் இருந்தாலும் பின்இருக்கையில் 3 பெரியவர்கள் அமர்ந்தாலும் இயல்பாக அமர்ந்து பயணிக்க முடியும். மேலும் உயரமானவர்களும் இயல்பாகவே பயணிக்க முடியும். 5 நபர்கள் இயல்பாக அமர்ந்து பயணிக்கலாம்

வெரிட்டோ காரின் முன்பகுதியில் எந்த மாற்றமும் செய்யாமல் வைப் காருக்கு பயன்படுத்தியுள்ளது.  பின்பறத்தில் சி பில்லரை நீக்கிவிட்டு ஹேட்ச்பேக் காராக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

மூன்று விதமான மாறுபட்டவையில் வெளிவந்திருக்கும் வைப் டீசல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கும். தற்பொழுது பெட்ரோல் எஞ்சினுடன் களமிறக்கும் திட்டம் இல்லை.

verito+vibe+dashboard

ரெனோ 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 64பிஎச்பி மற்றும் டார்க் 180என்எம் ஆகும்.

மஹிந்திரா வெரிட்டோ வைப் மைலேஜ் லிட்டருக்கு 20.8கிமீ ஆகும்.

டெயில் விளக்குகள் பின்புற கதவுகளுக்கு அருகே உள்ளது. இதன் தோற்றம் மற்றும் செயல்பாடு என அனைத்திலும் வெரிட்டோவையே நினைவு படுத்துகின்றது. ஸ்டீயரீங் அட்ஜஸ்ட் வசதிகள், 2 டின் ஆடியோ அமைப்பு, காற்றுப்பைகள், ஏபிஎஸ் என பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.

டாக்ஸி சந்தைக்கு ஏற்ற காராகவும் வெரிட்டோ வைப் வலம் வரும் என எதிர்பார்க்கலாம்.

ஆட்டோமொபைல் வல்லுனர்கள் வைப் காரை ஹேட்ச்பேக் என ஏற்றுகொள்ள யோசிக்கின்றனர். செடான் கார்களை போல் மஹிந்திரா வெரிட்டோ வைப் விளங்குகின்றது.

verito+vibe+boot

மஹிந்திரா வெரிட்டோ வைப் நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. செடான் கார்களின் பூட்ரூமிற்க்கு இனையாக ஒப்பீடு செய்து வருகின்றனர். எனவே இடவசதி மிக பெரிய பலமாக அமையும்.

டாக்ஸி பயன்பாட்டிற்க்கும் குடும்பத்திற்க்கான பயன்பாட்டிற்க்கும் ஏற்ற காராக வைப் விளங்கும்.

வெரிட்டோ வைப் விலை(எக்ஸ்ஷரூம் மும்பை)

டி2 ரூ.5.63 லட்சம்
டி4 ரூ.5.89 லட்சம்
டி6 ரூ.6.49 லட்சம்

 Mahindra Verito Vibe