மஹிந்திரா KUV100 பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

வரும் 15ந் தேதி மஹிந்திரா KUV100 எஸ்யூவி கார் விற்பனைக்கு வரவுள்ளது. சிறியரக எஸ்யூவி கார் மாடலான KUV100 காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் நேர்த்தியான வடிவமைப்பினை பெற்று விளங்குகின்றது.

கேயூவி100

இளமையான எஸ்யூவி என்ற பெயருடன் அழைக்கப்படும் கூல் யுட்டிலிட்டி வாகனத்தின் முக்கிய அம்சங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

 • மஹிந்திரா KUV1OO என்றால் kool utility vehicle 1 double oh
 • நேர்த்தியான வடிவத்துடன் மிக அழகான ஸ்டைலில் கேயூவி100 தோற்றம் உள்ளது.
 • எம் ஃபால்கான் 1.2 லிட்டர் சீரிஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 • 82 bhp @ 5500 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் G80 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 Nm 3500 முதல் 3600 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்
 • 77 bhp @ 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் D75 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
 • 6 இருக்கைகள் கொண்ட மாடலாக மகிந்திரா KUV100 விளங்குகின்றது.
 • உட்புறத்தில் முன்பக்க இருக்கைகள் பெஞ்ச் இருக்கைகளாகும். கோ , கோ ப்ளஸ் காரில் உள்ளது போல டேஸ்போர்டில் கியர் லிவர் அமைந்துள்ளது.
 • ஏபிஎஸ் பிரேக் வசதி அனைத்து வேரியண்டிலும் உள்ளது.
 • K2 , K2+ , K4 ,K4+ , K6 ,  K6+ மற்றும் K8 என மொத்தம் 7 விதமான வேரியண்டில் வரவுள்ளது.
 • இவற்றில் ப்ளஸ் வேரியண்ட்களில் கூடுதலாக முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் உள்ளது.
 • எக்ஸ்யூவி500 காரை தொடர்ந்து மோனோகூ கட்டமைப்பில் வந்துள்ள கேயூவி 100 காரில் சிறப்பான நிலைப்புதன்மை மற்றும் பாதுகாப்பு கொண்டிருக்கும்.
 • ஆரஞ்ச் , சிவப்பு , சில்வர் , வெள்ளை , கருப்பு , அகுவாமெரியன் மற்றும் கிரே என 7 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.
 • ரூ.4 லட்சம் முதல் 6.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் மஹிந்திரா KUV100 வரலாம்.
 • ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.
 • வரும் 15ந் தேதி கேயூவி100 கார் விற்பனைக்கு வருகின்றது.
 • வேகன்ஆர் , பீட் , கிராண்ட் ஐ10 , ஃபிகோ என அனைத்து சிறியரக கார்களுடன் மஹிந்திரா KUV100 போட்டியை சந்திக்கும்.

தொடர்புடையவை

மகிந்திரா KUV100 வேரியண்ட விபரம்

மஹிந்திரா கேயூவி 100 என்ஜின் விபரம்

[ajax_load_more post_type=”post” category=”%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be” tag=”%e0%ae%95%e0%af%87%e0%ae%af%e0%af%82%e0%ae%b5%e0%ae%bf100″]