மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி டாப் மாடலின் ரகசிய படம் வெளியாகியுள்ளது. மஹிந்திரா TUV300 எஸ்யூவி வரும் செப்டம்பர் 10ந் தேதி விற்பனைக்கு வருகின்றது.
புதிய காம்பேக்ட் ரக TUV300 எஸ்யுவி காரின் டாப் வேரியண்ட் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஜீப் மாடல் கார்களின் முகப்பு கிரிலை டியூவி300 கார் பெற்றுள்ளது.
7 இருக்கைகள் கொண்ட மஹிந்திரா டியூவி300 எஸ்யுவி காரில் எம்ஹாக் 1.5 லிட்டர் 3 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் மற்றும் மைலேஜ் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்சிலும் கிடைக்கும்.
உட்புறத்தில் கருப்பு நிற டேஸ்போர்டில் சில்வர் மற்றும் குரோம் இன்ஷர்ட்களை பெற்றுள்ளது. மேலும் தொடுதிரை அமைப்பு , ஆக்ஸ் இன் , யூஎஸ்பி தொடர்பு , பூளூடூத் ஆப்ஷன் போன்றவை இடம் பெற்றிருக்கும்.
மினி பொலிரோ போல காட்சியளிக்கும் TUV300 எஸ்யூவி வரும் 10ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.
Mahindra TUV300 snapped
imagesource