இத்தாலியின் மாசெராட்டி நிறுவனம் லாஃபெராரி காரினை அடிப்படையாக வைத்து புதிய எம்சி 12 காரினை வருகிற 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபெராரி மற்றும் மாசெராட்டி நிறுவனங்களை நிர்வாகிப்பது ஃபியட் நிறுவனமாகும்.
கடந்த 2004 ஆம் ஆண்டு இதே போல என்ஜோ ஃபெராரி காரினை அடிப்படையாக கொண்டு சூப்பர் காரினை வெளியிட்டுள்ளது. தற்பொழுது மீண்டும் லாஃபெராரி காரினை அடிப்படையாக வைத்து லாமாசெராட்டி அல்லது எம்சி 12 காரை வடிவமைக்க உள்ளது.
லாஃபெராரி காரின் அடிச்சட்டம், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ் அமைப்பு, சஸ்பென்ஷன் அமைப்பு என அவற்றையை மாசெராட்டி காரிலும் இருக்கும். ஆனால் தோற்றம் வடிவமைப்பு ஆகியவை புதிய வடிவமைப்பாக இருக்கும்.
லாஃபெராரி காரின் எஞ்சினே இதிலும் பயன்படுத்தப்படும். ஆனால் லாஃபெராரி போல ஹைபிரிட் இருக்காது. எஞ்சின் ஆற்றலும் 750-800 பிஎச்பிக்குள் இருக்கும்.
மேலும் லாமாசெராட்டி 50 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும். இதன் விலை ரூ 7 கோடிக்கு மேல் இருக்கும்.
thanks to carmagzine uk