மாருதி ஆல்டோ 800 காரின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடலை தொடர்ந்து ஆல்ட்டோ டீசல் இந்த ஆண்டின் இறுதிக்குள் வரவுள்ளது. மாருதி ஆல்டோ டீசல் கார் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை தரும்.
மாருதி ஆல்டோ 800 |
மாருதி சூசூகி நிறுவனத்தின் தொடக்க நிலை ஹேட்ச்பேக் காரான ஆல்டோ 800 மிக சிறப்பான வரவேற்ப்பினை பெற்ற மாடலாகும். டீசல் மாடல் வந்தால் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை ஆல்டோ 800 பெறும்.
தற்பொழுது விற்பனையில் உள்ள மாடல்களில் அதிக மைலேஜ் தரக்கூடிய மாடலாக மாருதி செலிரியோ டீசல் விளங்குகின்றது. இந்த காரில சுசூகி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 800சிசி டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
செலிரியோ டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 27.62கிமீ ஆகும். இதனை விட அதிக மைலேஜ் தரும் வகையில் என்ஜின் மேம்படுத்தப்பட்டிருக்கும். வரும் டிசம்பர் மாதம் ஆல்ட்டோ 800 டீசல் மாடல் விற்பனைக்கு வரலாம்.
Maruti to launch alto 800cc diesel model