மாருதி செலிரியோ டீசல் மாடல் ஜூன் 3 முதல்

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் காராக மாருதி செலிரியோ காரின் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு வரும்பொழுது அந்த பெருமையை பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

மாருதி செலிரியோ டீசல்
இந்த புதிய டீசல் என்ஜின் இந்தியாவிலே உருவாக்கப்பட்டுள்ளதாம். 47 பிஎச்பி ஆற்றலை தரும் 793சிசி என்ஜின் வடிவமைத்துள்ளனர். 

மேலும் ஆராய் சோதனைகளின் படி மாருதி செலிரியோ டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 27.62கிமீ என தெரிவிக்கப்படுகின்றது.

முதற்கட்டமாக 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் மட்டும் விற்பனைக்கு வருகின்றதாம். அதனை தொடர்ந்து ஏஎம்டி மாடல் விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது.
updated

ஜூன் 3ந் தேதி டீசல் செலிரியோ விற்பனைக்கு வருகின்றது. ஹூண்டாய் க்ராண்ட் i10 மற்றும் செவர்லே பீட் போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

Maruti celerio diesel car mileage 27.62kmpl. celerio diesel will be launched June month.