மாருதி பலேனோ காத்திருப்பு காலம் எவ்வளவு

0
மாருதி சுஸூகி பலேனோ கார் விற்பனைக்கு வந்த ஒரே வாரத்தில் இரண்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாருதி பலேனோ நெக்ஸா வழியாக மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது.

மாருதி பலேனோ
எஸ் க்ராஸ் மாடலை தொடர்ந்து நெக்ஸா வழியாக விற்பனை செய்யப்படும் பிரிமியம் காரான பலேனோ கார் ஸ்விஃப்ட் காருக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் டீசல் மாடலில் அதிகம் மைலேஜ் தரும் பிரிமியம் ஹேட்ச்பேக் காராகவும் , சிவிடி ஆட்டோமேட்டிக் பெட்ரோல் ஆப்ஷனிலும் வந்துள்ளது.
மாருதி சுசூகி பலேனோ ரூ.4.99 லட்சதில் அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இந்த விலை பண்டிகை கால சிறப்பு விலையாகும். தீபாவளிக்கு பிறகு பலேனோ காரின் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளது.
ஐ 20 , ஜாஸ் மற்றும் போலோ போன்ற கார்களுக்கு சவாலினை பலேனோ ஏற்படுத்தியுள்ளது.