மாருதி பலேனோ கார் : சிறப்பு அம்சங்கள் என்ன ?

0
மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் கார் சிறப்பு அம்சங்கள் மற்றும் முக்கிய வசதிகள் பலேனோ காரில் உள்ள தனித்துவமான அம்சங்களை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

மாருதி பலேனோ கார்

100க்கு மேற்பட்ட வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து பலேனோ கார் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.  இந்தியாவில் ஒரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷனில் வந்துள்ளது. சில நாடுகளுக்கு 1.0 லிட்டர்பெட்ரோல் ஈக்கோபூஸ்ட் என்ஜின் ஆப்ஷனிலும் விற்பனைக்கு செல்ல உள்ளது.  இந்தியாவில் மாருதி பலேனோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தாமதமாக வரவுள்ளது.

மாருதி பலேனோ கார்

1.  விலை

பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் கார் தன் போட்டியாளர்களை விட குறைவான விலையில் அமைந்திருப்பது இதன் மிகப்பெரிய பலமாகும்.  சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள எலைட் ஐ20 காருக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜாஸ் காருக்கும் குறைவான விலையில் அமைந்திருக்கின்றது.

2. வசதிகள்

போட்டியாளருக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல சவாலான வசதிகளை பெற்று விளங்கும் பலேனோ காரில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஆப்பிள் கார்பிளே ஸ்மார்ட்போன் தொடர்பு  , ரியர் பார்க்கிங் சென்சார் , ரியர் வியூ கேமரா , பூளூடூத் , யூஎஸ்பி ஆக்ஸ் , ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் பொத்தான்கள் , புராஜெக்ட்ர் முகப்பு விளக்கு , பகல் நேர எல்இடி விளக்குகள் , எல்இடி டெயில் விளக்குகள் , கீலெஸ் என்ட்ரி என பல வசதிகளை பெற்றுள்ளது.

3. பாதுகாப்பு

மாருதி பாதுகாப்பு தொடர்பான அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளது. பலேனோவில் அனைத்து வேரியண்டில் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி போன்ற அம்சங்கள் உள்ளது.

4. இடவசதி

3995மிமீ நீளமுள்ள சுஸூகி பலேனோ காரில் சிறப்பான இடவசதியை பெற்று விளங்குகின்றது. காலெகளுக்கு மற்றும் தலைக்கான இடம் போன்றவை சிறப்பாக உள்ளது. மேலும் இதன் பூட் ஸ்பேஸ் 339 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது.

5.  மைலேஜ்

சிறப்பான மைலேஜ் தரக்கூடிய பிரிமியம் ஹெட்ச்பேக் காராக அமைந்துள்ளது. பலேனோ பெட்ரோல் மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 21.4 கிமீ மற்றும் பலேனோ டீசல் மைலேஜ் லிட்டருக்கு 27.49 கிமீ ஆகும்.

6. என்ஜின்

வழக்கம்போல டீசல் காரில் மாருதி நிறுவனத்தின் ஆஸ்தான என்ஜினாகவும் இந்தியாவின் செல்ல என்ஜின் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

7. சிவிடி

பெட்ரோல் வேரியண்டில் பலேனோ கார் சிவிடி மற்றும் மெனுவல் கியர்பாக்ஸ் என இரண்டிலும் ஆப்ஷனிலும் வந்துள்ளது.

8.  கையாளுதல்

ஸ்விஃப் காரை விட 100 கிலோகுறைவான எடையில் வந்துள்ள மாருதி சுசூகி பலேனோ கார் சிறப்பான அனுபவம் மற்றும் பிரேக்கிங் செயல்பாட்டினை வழங்குகின்றது.

9. வேரியண்ட்

எஸ் க்ராஸ் மாடலை போலவே சிக்மா , டெல்டா ஜெட்டா , மற்றும் ஆல்ஃபா என்ற பெயரில் வேரியண்ட் பெயர்கள் அமைந்துள்ளது.

10. நெக்ஸா

எஸ் க்ராஸ் காரை தொடர்ந்து பலேனோ கார் மாருதி நெக்ஸா பிரிமியம் டீலர்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பதனால் சிறப்பான அனுபவத்தினை வாடிக்கையாளர்கள் பெற இயலும்.

பலேனோ கார்

மாருதி பலேனோ கார் விலை (சென்னை ஆன்ரோடு)

பெட்ரோல் பலேனோ விலை
  • சிக்மா : ₹ 5.80 லட்சம்
  • டெல்டா : ₹ 6.70 லட்சம்
  • ஜெட்டா : ₹ 7.40 லட்சம்
  • ஆல்ஃபா : ₹ 8.20 லட்சம்
  •  டெல்டா சிவிடி : ₹ 7.90 லட்சம்
டீசல் பலேனோ விலை
  • சிக்மா : ₹ 7.20 லட்சம்
  • டெல்டா :  8.00 லட்சம்
  • ஜெட்டா :  8.70 லட்சம்
  • ஆல்ஃபா : ₹ 9.50 லட்சம்
Maruti Baleno top 10 reasons buying