மாருதி பலேனோ , டிசையர் கார்கள் திரும்ப அழைப்பு

0

மாருதி சுசூகி நிறுவனத்தின் பலேனோ , டிசையர் கார்களில் காற்றுப்பை மற்றும் பழுதான ஃப்யூவல் ஃபில்டர்களை மாற்றும் நோக்கில் திரும்ப அழைக்க மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளது. 75,419 பலேனோ கார்கள் , 1961 டிசையர் கார்கள் என மொத்தம் 77,380 கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றது.

மாருதி பலேனோ
மாருதி பலேனோ கார்

ஆகஸ்ட் 3, 2015 முதல் மே 17 , 2016 வரை தயாரிக்கப்பட்ட 75,419 பலேனோ கார்கள் ஏர்பேக் மென்பொருள் மேம்படுத்துவதற்கும் மேலும் ஆகஸ்ட் 3, 2015 முதல் மார்ச் 22, 2016 வரை தயாரிக்கப்பட்டுள்ள  15,995 பலேனோ கார்களிலும் பழுதான எரிபொருள் வடிகட்டிகளை நீக்கவும் மேலும் 1961 ஸ்விப்ட் டிசையர் ஏஎம்டி கார்களிலும் பழுதான எரிபொருள் வடிகட்டிகளை நீக்குவதற்காக வருகின்ற மே 31 , 2016 முதல் தங்களின் டீலர்கள் வாயிலாக நேரடியாக அழைக்கப்பட உள்ளது.

Google News

சில நாட்களுக்கு முன்னதாக மாருதி சுசூகி எஸ் க்ராஸ் காரிலும் பழுதான பிரேக்கினை மாற்றுவதற்காக 20,427 கார்கள் திரும்ப அழைத்துள்ளது.

முழுமையாக படிக்க ; எஸ் க்ராஸ் திரும்ப அழைப்பு

உங்கள் கார்களும் இந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய பலேனோ, எஸ் க்ராஸ் கார்களுக்கு நெக்ஸா இணையத்தின் வாயிலாகவும் , டிசையர் காருக்கு மாருதி சுசூகி இணையத்திலும் சர்வீஸ் பகுதியில் வாகனத்தின் வின் நெம்பரினை கொண்டு  தெரிந்து கொள்ளலாம்.