மாருதி சுஸூகி பலேனோ கார் வரும் அக்டோபர் 26ந் தேதிவிற்பனைக்கு வரவுள்ள நிலையில் தற்பொழுது முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பலேனோ காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியாகியுள்ளது.
பவர் வின்டோஸ் ரியர் வைப்பர் மற்றும் டிஃபோகர் எலக்டரிகு உதவியுடன் அட்ஜெஸ்ட் ஆகும் விங் மிரர் கீலெஸ் என்ட்ரி 60:40 ஸ்பிளிட் இருக்கை முழுவீல் கவர் சிவிடி (பெட்ரோல்) ரியர் பார்க்கிங் சென்சார்
மாருதி பலேனோ |
மாருதி நெக்ஸா டீலர்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள பலேனோ காரில் எஸ் க்ராஸ் போலவே வேரியண்ட் விபரங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
பலேனோ காரின் அளவுகள்
- நீளம்: 3,995 mm
- உயரம்: 1,500 mm
- அகலம்: 1,745 mm
- வீல்பேஸ்: 2,520 mm
- கிரவுண்ட் கிளிரன்ஸ்: 180 mm
- சக்கரம்: 195/55 R16
பலேனோ என்ஜின் விபரம்
- 84பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மெனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் உள்ளது.
- 75பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மெனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே.
மாருதி சுசூகி பலேனோ வேரியண்ட் விபரம்
பலேனோ காரில் சிக்மா , டெல்டா ,ஜெட்டா மற்றும் ஆல்ஃபா என 4 வேரியண்டில் கிரே , சிவப்பு , நீலம் , ஆரஞ்சு , சில்வர் , வெள்ளை மற்றும் ரே நீலம் என மொத்தம் 7 வண்ணங்களில் கிடைக்கும்.
பலேனோ சிக்மா ;
- முன்பக்க இரட்டை காற்றுப்பைகள்
- ஏபிஎஸ் மற்றும் இபிடி
- பவர் ஸ்டீயரிங்
- டில்ட் ஸ்டீயரிங்
- கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர்
- பவர் வின்டோஸ் (முன்பக்க கதவுகளுக்கு மட்டும்)
- சென்ட்ரல் லாக்கிங்
- ரியர் பார்சல் டிரே
- சென்ட்ரல் லாக்கிங்
- ஏசி மற்றும் ஹிட்டர்
பலேனோ டெல்டா
பலேனோ ஜெட்டா
- லெதர் சுற்றப்பட்ட கியர் நாப் மற்றும் ஸ்டீயரிங் வீல்
- டெலிஸ்கோபிக் ஸ்டீயரிங்
- அலாய் வீல்
- ஓட்டுநர் இருக்கை அட்ஜெஸ்ட்மென்ட்
- என்ஜின் ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்
- ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்கு
- ஃபாலோ மீ ஹோம் விளக்கு
- பனி விளக்கு
பலேனோ ஆல்ஃபா
- புராஜெக்டர் முகப்பு விளக்கு
- ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா
- ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட்
- தொடுதிரை மற்றும் நேவிகேஷன்
எலைட் ஐ20 , ஜாஸ் , போலோ போன்ற கார்களுக்கு மாருதி பலேனோ போட்டியை தரும். எஸ் க்ராஸ் போல நெக்ஸா டீலர் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.
`Maruti Suzuki Baleno variants leaked