கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக யூட்டிலிட்டி சந்தையில் முன்னனி வகிக்கும் மஹிந்திரா பொலிரோ காரில் 4 மீட்டருக்கு குறைவான நீளத்திலும் குறைந்த சிசி என்ஜின் பொருத்தப்பட்ட மாடலை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட கார்கள் மற்றும் 1500சிசி என்ஜினுக்கு உட்பட்ட கார்களுக்கு கூடுதல் வரியில்லை என்பதனால் அனைத்து தயாரிப்பாளர்களும் 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட கார்களை தயாரிக்கவே விரும்புகின்றது. பொலிரோ கார் ஊரக பகுதி மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளில் அமோக வரவேற்பினை பெற்று விளங்குகின்றது.
நகரத்துக்கு ஏற்ற வகையில் 4 மீட்டருக்குள் பொலிரோ காரை வடிவைக்க உள்ளது. மேலும் இதில் 1.5 லிட்டர் எம் ஹாக் 80 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். U108 என்ற குறியீட்டு பெயரில் இந்த புதிய மினி பொலிரோ கார் தயாராக உள்ளது. டியூவி300 மற்றும் நூவோஸ்போர்ட் எஸ்யூவி போன்ற 4 மீட்டர் நீளத்துக்கு குறைவான மாடல்களுடன் பொலிரோ காரும் வரவுள்ளது மேலும் 1.5 லிட்டர் எம்ஹாக் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.
கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ கொண்டுள்ள பொலிரோ எஸ்யூவி காரின் அதே கிரவுண்ட் கிளியரன்ஸை மினி பொலிரோ எஸ்யூவி காரும் பெற்றிருக்கும். வருகின்ற ஆகஸ்ட் மத்தியில் புதிய மினி மஹிந்திரா பொலிரோ எஸ்யுவி வரவுள்ளது.