மீண்டும் ஸ்கோடா ஃபேபியா வருகிறதா ?

0

ஸ்கோடா இந்தியா நிறுவனம் மீண்டும் ஃபேபியா காரினை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்கோடா ஃபேபியா

மிகவும் மோசமான விற்பனை காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டில் ஃபேபியா காரின் விற்பனையை தற்காலிமாக ரத்து செய்தது. மேலும் திருப்தியற்ற வாடிக்கையாளர் சேவையால் சந்தை மதிப்பினை இழந்து வந்த்து.

Google News

தற்பொழுது ஸ்கோடா இந்தியா வாடிக்கையாளர்களுக்கு திருப்த்தியான சேவையை அளிக்கும் வகையில் கட்டமைப்பினை மேம்படுத்த உள்ளதாகவும் பிராண்டின் மதிப்பினை உயர்த்தவும், அதிகப்படியான லாபத்தினை ஈட்டும் வகையில் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

வாடிக்கையாளர் மத்தியில் சிறப்பான சேவையை உயர்த்திய பின்னர் மீண்டும் புதிய ஃபேபியா ஹேட்ச்பேக் காரினை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக ஸ்கோடா இந்திய சிஇஓ சுதிர் ராவ் தெரிவித்துள்ளார்.

ஃபேபியா car

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் ஸ்கோடா நிறுவனம் புதிய தலைமுறை ஃபேபியாவை பிரிமியம் ஹேட்ச்பேக் காராக மிக அழகான தோற்றத்தில் உருவாக்கியுள்ளது.

புதிய ஃபேபியா கார் முந்தைய மாடலை விட மிக சிறப்பான எரிபொருன் சிக்கனத்தினை வழங்கும் வகையில் என்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 17 சதவீத வரை மேம்படுத்தியுள்ளனர்.

புதிய ஃபேபியா விற்பனைக்கு வந்தால் சிறப்பான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.