Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மெர்சிடிஸ் பென்ஸ் GLC எஸ்யூவி அறிமுகம்

by MR.Durai
18 June 2015, 4:36 am
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது

மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்

முதல் எம்ஜி மோட்டார் எஸ்யூவி பெயர் நாளை வெளியாகிறது

புதிய டாடா ஹார்ன்பில் எஸ்யூவி கான்செப்ட் வெளியாகிறது

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி புக்கிங் ஆரம்பம்

மெர்சிடிஸ் பென்ஸ் V கிளாஸ் எம்பிவி அறிமுக தேதி விபரம்

மெர்சிடிஸ் பென்ஸ் GLK எஸ்யூவி காருக்கு மாற்றாக மெர்சிடிஸ் பென்ஸ் GLC எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC எஸ்யூவி 2016ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரும்.

மெர்சிடிஸ் பென்ஸ் GLC

மெர்சிடிஸ் பென்ஸ் GLC தோற்றம்

மெர்சிடிஸ் பென்ஸ் GLC எஸ்யூவி முகப்பில் இரண்டு ஸ்லாட்களுக்கு மத்தியில் மெர்சிடிஸ் இலச்சினை பதிக்கப்பட்டுள்ளது. முப்பரிமான ரேடியேட்டர் கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரைக்கிங் முகப்பு விளக்குகள் மற்றும் ஆப்ஷனலாக எல்இடி விளக்குகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மெர்சிடிஸ் பென்ஸ் GLC எஸ்யூவி

பக்கவாட்டில் உள்ள புரொஃபைல் கோடுகள் ,கருப்பு மேட் கிளாடிங் , 20 இஞ்ச் ஆலாய் வில் ஆகியவை சிறப்பான தோற்ற பொலிவினை வழங்குகின்றது.

பின்புறத்தில் உள்ள பம்பர் இரட்டை குரோம் பூச்சு புகைப்போக்கி , எல்இடி டெயில் விளக்குகளை பெற்றுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி இன்டிரியர்

மெர்சிடிஸ் பென்ஸ் GLC காரின் உட்புறத்தில் பெரும்பாலான பகுதிகளை சி- கிளாஸ் செடான் காரில் இருந்து பெற்றுள்ளது. கமான்டு தொடுதிரை அமைப்பு , லெதர் அப்ல்சரி , ஸ்டைலான ஸ்டீயரிங் வீல் போன்றவற்றை கொண்டுள்ளது. சன்ரூஃப் , ஏர் ஃபீல் கேபின் போன்றவற்றை ஆப்ஷனாலாக பெறலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் GLC இன்டிரியர்
மெர்சிடிஸ் பென்ஸ் GLC இன்டிரியர்
மெர்சிடிஸ் பென்ஸ் GLC ஸ்டீயரிங்

மெர்சிடிஸ் பென்ஸ் GLC என்ஜின்

2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என இரண்டு விதமான பவர் ஆப்ஷனில் கிடைக்கின்றது. GLC 250 பெட்ரோல் மாடலில் 211எச்பி ஆற்றலை தரும் இதன் முறுக்கு விசை 350என்எம் ஆகும். GLC 350e ஹைபிரிட் பெட்ரோல் மாடலில் 327எச்பி ஆற்றலை தரும்.

மெர்சிடிஸ் பென்ஸ் GLC கார்

GLC 220d டீசல் மாடலில் 170எச்பி ஆற்றலை தரும் இதன் முறுக்கு விசை 400என்எம் ஆகும். GLC 250d டீசல் மாடலில் 204எச்பி ஆற்றலை தரும் இதன் முறுக்கு விசை 500என்எம் ஆகும்.

அனைத்து மாடலிலும் 9G-ட்ரானிக் தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். GLC 350e ஹைபிரிட் மாடலில் மட்டும்  7G-ட்ரானிக் ப்ளஸ் தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

மெர்சிடிஸ் பென்ஸ் GLC எஸ்யூவி

GLC எஸ்யூவி சிறப்பம்சங்கள்

பென்ஸ் ஜிஎல்சி காரில் ஏர் சஸ்பென்ஷன் பாடி கன்ட்ரோல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனத்தின் கிரவுண்ட் கிளியரண்சை ஆஃப் ரோடு மற்றும் ஆன் ரோடுக்கு தகுந்தாற்போல் 15மிமீ முதல் 50மிமீ வரை உயர்த்த முடியும்.

டைனமிக் செலக்ட் மூலம் 5 விதமான டிரைவிங் மோட் ஆப்ஷனை கொண்டுள்ளது. அவை ஈக்கோ, கம்ஃபோர்ட் , ஸ்போர்ட் , ஸ்போர்ட் + மற்றும் இன்டிடூவல் ஆகும். அனைத்து வேரியண்டில் 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் நிரந்தர  அம்சமாக உள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் GLC எஸ்யூவி

மெர்சிடிஸ் நிறுவனத்தின் MRA (Modular Rear Architecture) தளத்தில் ஜிஎல்சி எஸ்யூவி கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதே தளத்தில்தான் C-கிளாஸ் செடானும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2016ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் GLC எஸ்யூவி
மெர்சிடிஸ் பென்ஸ் GLC எஸ்யூவி

       [youtube https://www.youtube.com/watch?v=hr4ps9q0zEY]

Mercedes-Benz GLC SUV unveiled

Tags: Mereceds-BenzSUV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 சுசூகி வி-ஸ்ட்ராம் SX 250 பைக்கின் விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்

ஜிஎஸ்டி 2.0 எதிரொலி., சுசூகி ஸ்கூட்டர்கள், பைக்குகள் விலை குறைப்பு

மாருதி சுசூகி டிசையர்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.!

சைபர் தாக்குதலால் தினமும் 7560 கோடி ரூபாயை இழக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan