ரூ.39,650 விலையில் மஹிந்திரா பேண்டீரோ

0
மஹிந்திரா டூவிலர் பிரிவு பேண்டீரோ பைக்கின் பேஸ் வேரியண்ட்டை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 100சிசி-110சிசி சந்தையில் அதிக பைக்கள் விற்பனை செய்யப்படும் பிரிவாகும்.

பேஸ் பேண்டீரோ ஸ்போக் வீல், கிக் ஸ்டார்ட் மற்றும் அனாலாக் இன்ஸ்டூருமெண்ட்டில் வெளிவந்துள்ளது. பேண்டீரோ  பைக்கில் 106.7சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 8.5 பிஎச்பி ஆகும்.
மஹிந்திரா பேண்டீரோ
மஹிந்திரா பேண்டீரோ பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 79கிமீ ஆகும்.
பேண்டீரோ பேஸ் வேரியண்ட் விலை ரூ. 39,650 மட்டுமே(எக்ஸ்ஷோரூம் டெல்லி)
தற்பொழுது ஷோரூம்களில் மஹிந்திரா பேண்டீரோ கிடைக்கின்றது.