ரெனோ கேப்டூர் எஸ்யூவி ஸ்பை படங்கள் வெளியானது

0

வருகின்ற 2017 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள ரெனோ கேப்டூர் எஸ்யூவி காரின் சோதனை ஓட்டத்தை ரெனோ தொடங்கியுள்ளது. டஸ்ட்டர் காரின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலாக கேப்டூர் விளங்குகின்றது.

இந்தியாவில் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் ரெனோ கேப்டூர் மாடலானது. டஸ்ட்டர் காரில் இடம்பெற்றுள்ள அதே 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு 108 ஹெச்பி பவர் மற்றும் 245 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேகமேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஈசி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம். மேலும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடலும் வரும் வாய்ப்புகள் உள்ளது.

பிரேசில் நாட்டில் விற்பனையில் உள்ள அதே காரினை போன்ற தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியரை பெற்றதாக விளங்கலாம். மேலும் இருவண்ண கலவையிலான டேஸ்போர்டு , தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் மேலும் பல நவீன வசதிகளை கொண்டதாக விளங்கும்.

image source :iab

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள ரெனோ கேப்டூர் க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி  காரின் போட்டியாளர்களாக உயர்ரக க்ரீட்டா , பிஆர் வி , எக்ஸ்யூவி 500 மற்றும் வரவுள்ள நிசான் கிக்ஸ் போன்ற மாடல்கள் விளங்கும். கேப்டூர் விலை ரூ.15.50 லட்சம் விலையில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.