ரெனோ லாட்ஜி காருக்கு முன்பதிவு தொடங்கியது

ரெனோ லாட்ஜி எம்பிவி கார் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் தற்பொழுது லாட்ஜி காருக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

ரெனோ லாட்ஜி
சந்தையில் விற்பையில் உள்ள எம்பிவி மாடல்களில் கூடுதலான இடவசதி கொண்ட 7 மற்றும் 8 இருக்கைகள் என இரண்டு விதமான வகைகளில் லாட்ஜி கிடைக்கும். மேலும் பூட் இடவசதி 207 லிட்டர் அளவு கொண்டதாகும் மூன்றவாது வரிசை இருக்கையை மடக்கினால் 589 லிட்டர் அளவாக விரிவடையும்.
1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 83.5பிஎச்பி மற்றும் 108.5 பிஎச்பி என இரண்டு விதமான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இரு ஆப்ஷன்களை கொண்ட மாடலாக லாட்ஜி கிடைக்கும். 
83.5பிஎச்பி மாடலில் லிட்டருக்கு 21.04கிமீ மைலேஜ் தரும் .இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
108.5பிஎச்பி மாடலில் லிட்டருக்கு 19.98கிமீ மைலேஜ் தரும் .இதில் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். 
இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் இபிடி மற்றும் பிரேக் அசிஸ்ட் போன்ற பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும். மேலும் நவீன பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருக்கும்.
ரெனோ லாட்ஜி விலை ரூ.9 முதல் 14 லட்சத்தற்க்குள் இருக்கலாம்.
லாட்ஜி எம்பிவி காருக்கு மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ரூ.50,000 கொடுத்து லாட்ஜி காருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒருவேளை முன்பதிவினை ரத்துசெய்தால் முழுபணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

updated-

இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி மற்றும் பிரேக் அசிஸ்ட் , ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் , ரியர் வியூ கேமரா , பல வசதிகள் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, ஆக்ஸ் , யூஎஸ்பி , பூளூடூத் இனைப்பு  வசதிகள் மேலும் 3 வரிசை இருக்கைகளுக்கும் ஏசி வசதி , ரியர் வைப்பர் , டிஃபோக்கர், 15 இஞ்ச் ஆலாய் வீல் மற்றும் லெதர் அப்ல்சரி போன்றவற்றை கொண்டுள்ளது.

2 வருட வாரண்டி அல்லது 50,000கிமீ வரை வாரண்டி கொடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டாப் வேரியண்ட் மட்டும் விற்பனைக்கு வருகின்றதாம் அதனை தொடர்ந்து பேஸ் வரியண்ட் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனிநபர் பயன்பாட்டிற்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க உள்ளனராம்.