ரெனோ ஸ்காலா லிமிடெட் எடிசன்

0
ரெனோ நிறுவனத்தின் மிக பிரபலமான செடான் காரான ஸ்காலா தற்பொழுது வரையறுக்கப்பட்ட பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்த லிமிடெட் எடிசன் பெயர் ஸ்காலா டிராவலோக் ஆகும்.

லிமிடெட் எடிசன் ஆர்எக்ஸ்இசட் டீசல் வேரியண்டில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்காலா டிராவலோக் மே 31 வரை மட்டுமே கிடைக்கும்.லிமிடெட் எடிசனில் சேர்க்கப்பட்ட வசதிகளின் விவரங்கள்..

Renault Scala

மேம்படுத்தப்பட்ட சாட்டிலைட் நேவிகேஷன் அமைப்பு. இந்த அமைப்பில் தொடுதிரையுடன் விளங்கும். இதனுடன் யூஸ்பி இணைப்பு, டிவிடி ப்ளேயர், பூளுடுத் இணைப்பு மற்றும் ஐ- பாட் இனைப்பினை ஏற்படுத்த முடியும். பின்புற கேமரா, ஸ்டீயரிங் ஆடியோ கன்ட்ரோல் மற்றும் பின்புறத்தில் சூரிய வெப்பத்தினை தடுக்க சன் செட், மற்றும் ஸ்க்ஃப் பிளேட்.

Google News

ரியர் வியூ கண்ணாடியில் இன்டிக்கேட்டர் மற்றும் சைலன்சரில் மஃப்லர் கட்டர் பயன்படுத்தியுள்ளனர்.

ஸ்காலா இந்திய சந்தையில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இதன் விற்பனை வளர்ச்சினை அதிகரிக்கவே லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆற்றல் 84.8 பிஎச்பி ஆகும். இதன் டார்க் 200 என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 21 கிமீ கிடைக்கும்.

ஸ்காலா டிராவலோக் (ஆர்எக்ஸ்இசட் டீசல் வேரியண்ட் விலை) ரூ 9.78,500(தில்லி விலை)