எஸ்யூவி வடிவில் உருவாக்கப்படும் கேப்ரியோ மாடலாக விளங்கும் எவோக் கோப்ரியோ கார் சிறப்பான வரவேற்பினை பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
2012 ஜெனிவா மோட்டார் ஷோவில் எவோக் கேப்ரியோ பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வரும். நவீன வசதிகள் மற்றும் நேர்த்தியான வடிவத்தில் எவோக் எஸ்யுவி விளங்கும்.