Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரேஞ்ச் ரோவர் வேலார் எஸ்யூவி அறிமுகம்

by automobiletamilan
மார்ச் 2, 2017
in Auto Show

87வது ஜெனிவா மோட்டார் கண்காட்சி அரங்கில் பார்வைக்கு  வரவுள்ள ரேஞ்ச் ரோவர் வேலார் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லேண்ட் ரோவர் ரேஞ்ச்ரோவர் வேலார் எஸ்யூவி ஆரம்ப விலை £44,830 (ரூ.36,71,044) இங்கிலாந்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

வேலார் எஸ்யூவி

எவோக் மற்றும் எவோக் ஸ்போர்ட் மாடலுகளுக்கு இடையே நிலைநிறுத்தப்பட்டுள்ள வேலார் எஸ்யூவி (Velar) காரில் 3 விதமான டீசல் இன்ஜின் இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின் என மொத்தம் 5 விதமான தேர்வுகளில் கிடைக்க உள்ளது.

டிசைன்

எவோக் மற்றும் ஸ்போர்ட் கார்களின் வடிவ உந்துதலை கொண்டு நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டுள்ள புதிய வீலர் எஸ்யூவி காரின் முன்பக்க தோற்றம் மிக நேர்த்தியான லேண்ட் ரோவர் பாரம்பரிய கிரில் அமைப்புடன் ஸ்டைலிசான முன்பக்க பம்பர் ,தட்டையான மேட்ரிக்ஸ் லேசர் எல்இடி (Matrix-Laser) ஹெட்லேம்ப் போன்றவற்றை பெற்று மிகுந்த ஆக்ரோஷமாக வேலார் மாடல் விளங்குகின்றது. 22 அங்குல அலாய் ஸ்டைலிசான புரஃபைல் கோடுகளுடன் விளங்குகம் காரின் பின்புறத்தில் ஸ்டைலிசான எல்இடி டெயில் விளக்கு போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.

இன்டிரியர்

உயர்தர பிரிமியம் லெதர் இருக்கைகளுடன் கிடைக்கின்ற வேலார் எஸ்யூவி காரின் டேஸ்போர்டில் இரண்டு 10 அங்குல Touch Pro Duo இன்ஃபோட்யின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நவீன வசதிகளை பெற்றுள்ளது. 12.5 அங்குல இன்ஸ்டுரூமென்ட் கிளஸ்ட்டர் இருவிதமான அனலாக டயலுடன் விளங்குகின்றது. 20க்கு மேற்பட்ட ஹீட்டிங் மற்றும் ஏசி ஆப்ஷன்களை பெற்று விளங்குகின்றது.

வேலார் எஸ்யூவி இன்ஜின்

2.0 லிட்டர் டீசல் இன்ஜின்  178 bhp மற்றும் 430 Nm அல்லது 237 bhp மற்றும் 500 Nm என இரு விதமான ஆற்றல் தேர்வுகளில் கிடைக்க உள்ளது. இதுதவிர 3.0 லிட்டர் டீசல் மோட்டார் 296 bhp பவர் மற்றும் 700 Nm டார்க் வெளிப்படுத்தும். அனைத்திலும் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்சினியம்  247 bhp பவர் மற்றும்  365 Nm டார்க் அல்லது 296 bhp பவர் மற்றும் 400 டார்க் வெளிப்படுத்தும். இதுதவிர 375 ஹெச்பி பவர் மற்றும் 450 என்எம் டார்க் வெளிப்படுத்தும் டர்போசார்ஜ்டு என்ஜின் ஆப்ஷனிலும் வந்துள்ளது. அனைத்திலும் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

போட்டியாளர்கள்

வேலார் எஸ்யூவி காரின் போட்டியாளர்கள் பிஎம்டபிள்யூ X5, ஆடி Q7, வால்வோ XC90, ஜாகுவார் F-Pace மற்றும் போர்ஷே மாசான் போன்றவை ஆகும்.

இந்தியா வருகை

இங்கிலாந்தில் ரூ.37 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் இந்திய சந்தையில் ரூ. 60 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

Range Rover Velar SUV – image gallery

47 படங்கள் இணைப்பு

[foogallery id=”17121″]

Tags: Range Roverவேலார்
Previous Post

கார் விற்பனை நிலவரம் – பிப்ரவரி 2017

Next Post

ரேஞ்ச் ரோவர் வேலார் எஸ்யூவி படங்கள் மற்றும் வீடியோ

Next Post

ரேஞ்ச் ரோவர் வேலார் எஸ்யூவி படங்கள் மற்றும் வீடியோ

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version