ரேஞ்ச் ரோவர் சென்டினல் குண்டு துளைக்காத எஸ்யூவி அறிமுகம்

0

குண்டு துளைக்காத ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யூவி காரை டாடா குழுமத்தின் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி வேரியண்டில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யூவி
ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யூவி 

ஜாகுவார் லேண்ட்ரோவர் சிறப்பு வாகன பிரிவால் உருவாக்கப்பட்டுள்ள சென்டினல் கவச காரில் சிறப்பான பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கும். லேண்ட்ரோவர் நிறுவனத்தின் முதல் கவச வாகனமாக சென்டினல் VR8 தரச் சான்றிதழுடன் வந்துள்ளது.

Google News
ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யூவி

ரேஞ்ச் ரோவர் சென்டினல் சொகுசு எஸ்யூவி காரில் 337பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மிகவும் சக்திவாய்ந்த வி6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ZF-8 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆற்றலானது நான்கு வீல்களுக்கும் செல்லும் வகையில் 4WD டெர்ரியன் ரெஸ்பான்ஸ் அமைப்பினை பெற்றுள்ளது.

6 துண்டுகளை கொண்டு இணைக்கப்பட்ட மிக வலிமையான ஸ்டீல் கொண்டு இதன் பாடி அமைப்பினை வடிவமைத்துள்ளனர். குண்டு துளைக்காத பல அடுக்குகளை கொண்ட மல்டி லேமினேட்ட கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ரேஞ்ச் ரோவர் சென்டினல் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதி என எங்கும் குண்டு துளைக்காத வகையில் அதாவது 15கிலோ டிஎன்டி வெடிபொருள் மற்றும் DM51  கைஎறி குண்டை தாங்கும் திறனை பெற்றுள்ளது.

 

ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யூவி
ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யூவி விபரம்

தீயை கட்டுப்படுத்தும் அமைப்பு , அவசரகால சைரன் சத்தம் , அவசரகால விளக்குகள் , ஸ்பிக்கர்கள் , ரன் ஃபிளாட் டயர் , சீலிங் எரிபொருள் கலன் , அவசரகால தப்பிக்கும் வழி போன்றவை உள்ளது.

பல விதமான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட  ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யூவி விலை ரூ.2.98 கோடியாகும்.

 

ரேஞ்ச் ரோவர் சென்டினல் இன்டிரியர்
ரேஞ்ச் ரோவர் சென்டினல் இன்டிரியர்

 

ரேஞ்ச் ரோவர் சென்டினல் இன்டிரியர்
ரேஞ்ச் ரோவர் சென்டினல் பின்புற இருக்கை
ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யூவி
ரேஞ்ச் ரோவர் சென்டினல் பின்புறம்

Range Rover Sentinel armored SUV revealed